அக்.19 தொடங்கி சுங்கை சிப்புட்டில் TSV தீபாவளிச் சந்தை

Malaysia, News

 103 total views,  1 views today

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தின்போது வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்திய சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்  TSV தீபாவளிச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை 19ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரையிலும்  80க்கும் மேற்பட்ட கூடாரங்களுடன் சுங்கை சிப்புட் அரேனா வளாகத்தில் காலை 10.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரையிலும் தீபாவளிச் சந்தை நடைபெறவுள்ளது என்று கமுனிங் இளைஞர் மன்றத்தின் தலைவர் தா.நடராஜா தெரிவித்தார்.

இந்த தீபாவளிச் சந்தையில் முழுக்க முழுக்க சுங்கை சிப்புட் இந்திய வணிகர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதோடு 50 கூடாரங்கள் வணிகர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

10 இயக்கங்களின் பெரு ஒத்துழைப்போடு நடைபெறும் இந்த தீபாவளிச் சந்தையில் தினந்தோறு அதிர்ஷடக் குலுக்கல்கள் இடம்பெறும். சுங்கை சிப்புட் மக்களுக்கு அரிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இதில் சுங்கை சிப்புட் மக்களும் சுற்று வட்டாரத்தினரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று நடராஜா கேட்டுக் கொண்டார்.

விளம்பரம்

Leave a Reply