அக்.25இல் பேரா மாநில பிஎச் வேட்பாளர் அறிவிப்பு- ஙா கோர் மிங்

Malaysia, News, Politics

 96 total views,  1 views today

ரா.தங்கமணி

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி  பேரா மாநில வேட்பாளர் பட்டியல் வரும் 25ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று பேரா மாநில ஜசெக தலைவர் ஙா கோர் மிங் அறிவித்தார்.

ஈப்போவில் நடைபெறவுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் சிறப்பு மாநாட்டில் வேட்பாளர் பட்டியல் மட்டுமல்லாது, போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும்.

இம்முறை பேரா மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

நேற்று இங்கு நடைபெற்ற பேரா ஜசெகவின் இந்திய ஊடகவியலாளர்களுடனான தீபாவளி உபசரிப்பில் உரையாற்றியபோது ஙா கோர் மிங் இவ்வாறு கூறினார்.

Leave a Reply