
அடிப்படை ஊதியம் வாங்கும் ஊழியர்களின் அடிப்படை உணவுக்கானச் செலவு ரிம 405.00 !
24 total views, 2 views today
குமரன் | 19-1-2023
அடிப்படை ஊதியம் பெறும் மலேசியர்கள் மாதம் ஒன்றுக்கு ரிம 405.46 மதிப்பிலான அடிப்படை உணவுப் பொருட்களை வாங்க செலவிடுகிறார்கள் என பொருட்கள் வாங்கும் சேவையான Picodi வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சனவரி மாதத்தில் குறைந்தது ரிம 1052யை ஊதியமாகக் கொண்டு சென்றவர்கள் இப்போது ரிம 1323 ஆகப் பெறுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்ப்டையில் பார்க்கும்போது, ஒரு மாத ஊதியத்தில் அவர்கள் 30.6% அடிப்படை உணவுக்காகச் செலவிடுகிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது.
10 லிட்டர் பால் : ரிம 69.90
10 முழு வெதுப்பிகள் : ரிம 35.10
1.5 கிலோ அரிசி : ரிம 7.76
20 முட்டைகள் : ரிம 10.75
1 கிலோ பாலாடைக் கட்டி : ரிம 47.88
6 கிலோ கோழி / வாத்து / இறைச்சி : ரிம 151.20
6 கிலோ பழங்கள் : ரிம 51.20
8 கிலோ காய்கறிகள் : 31.67
கடந்த சனவரி மாதத்தில் அடிப்படை உணவுக்கானச் செலவும் ரிம 371.55 ஆக இருந்த நிலையில் இவ்வாண்டு சனவரியில் அது ர்ம 405.45 ஆக உயர்ந்துள்ளது.
பொருட்கள் – சேவைகள் ஆகியவற்றின் விலைகளை உலகளாவிய நிலையில் கவனித்து வரும் numbeo.com அமைப்பின் வாயுலாக உணவுப் பொருட்களின் விலையைப் பெற்றுள்ளது Picodi.
அடிப்படை ஊதியத்தை அரசாங்கம் முடிவு செய்திருக்கும் 67 நாடுகளில் Picodi தமது இந்த ஆய்வினை நடத்தியது.
கடந்த ஆண்டு சனவரி மாதத்தைக் காட்டிலும் இவ்வாண்டு சனவரி மாத நிலவரப்படி மலேசியர்களின் அடிப்படை ஊதியம் 25.8% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.