அதிகார பசியினாலே மாநில அரசுகளை கலைக்க தயங்குகிறது பிஎச்- ஸாயிட்

Malaysia, News, Politics

 266 total views,  1 views today

கோலாலம்பூர்-

அதிகாரப் பசியினாலே தமது அதிகாரத்திற்குட்பட்ட மாநில அரசுகளை கலைக்க பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தயக்கம் காட்டுகிறது என்று அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் வழி புதிய அரசாங்கத்தை அமைக்க தேர்தலே சிறந்த வழி. ஆனால் அதனை முன்னெடுக்க தயக்கம் காட்டும் பிஎச் கூட்டணி நவம்பர் மாத மத்தியில் ஏற்படுவதாக கூறப்படும் பெருமழை வெள்ளத்தை காரணம் காட்டுகிறது.

பிஎச் கூட்டணி வசமுள்ள பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநில அரசுகள் முழு தவணைக்கு பின்னரே தேர்தலை நடத்த முடிவெடுத்துள்ளன. பொதுத் தேர்தலுடன் மாநிலத் தேர்தலை நடத்தாமல் தனியாக நடத்துவது பண விரயமாகும்  என்று ஸாயிட் ஹமிடி சாடினார்.

Leave a Reply