அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் கோவிட்-19 வைரஸ் தாக்கலாம்

Uncategorized

 178 total views,  2 views today

பெய்ஜிங்-

தற்போதுள்ள கோவிட்-19 வைரஸ்களை காட்டிலும் உயிரிழப்புகளை அதிகம் ஏற்படுத்தக்கூடிய அதிக வீரியமுள்ள கோவிட்-19 வைரஸ் தாக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2019 டிசம்பரில் கோவிட்-19 வைரஸ் தொற்றை அம்பலப்படுத்திய சீனாவின் வெளவால் பெண் என்று அழைக்கப்படும் ஆராய்ச்சியாளர் ஷீ ஷெங்லி விடுத்துள்ள எச்சரிக்கையில் மரபணுவில் காணும் மாற்றத்தினால் கொடிய கோவிட்-19 வைரஸ் உருவாகி இன்னும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் சொன்னார்.
உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் பரவியிருப்பதால் இந்த மரபணு மாற்றம் நிகழ்வதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தற்போது கோவிட்-19 தொற்றுக்கு ஆளான 3இல் ஒரு பகுதியினர் அந்த தொற்றினால் உயிரிழக்கக்கூடும் என்றும் சீனா, வூஹான் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஷீ ஷெங்லி தெரிவித்தார்.

Leave a Reply