அந்தாதிப் பறவைகள் நூல் வெளியீட்டு விழா

Malaysia, News

 275 total views,  1 views today

டி.ஆர்.ராஜா
பட்டர்வொர்த், டிச. 14 –
பினாங்குத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் பட்டர்வொர்த் எழுத்தாளர் செ.குணாளன் எழுதிய புதுக்கவிதை நூலான ‘அந்தாதிப் பறவைகள்‘ நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

பினாங்கு மாநில குற்றத் தடுப்பு அறவாரியதின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன் தலைமையில் எதிர் வரும் 26-12-2021, ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு பட்டர்வொர்த் டேவான் டத்தோ ஹாஜி அஹமாட் படாவியில் நூல் வெளியீடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க ம.கனகராஜன் நூலாவு செய்ய, எழுத்தாளர் சங்க நிர்வாகத்தினர் நிகழ்ச்சியை வழி நடத்துவார்கள். பினாங்கு, மாநில இலக்கிய சுவைஞர்கள் கலந்துக்கொள்ளும் அந்தாதிப் பறவைகள் நூல் வெளியீட்டு விழாவில் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும்படி எழுத்தாளர் ச.ந.வேணுகோபால் கேட்டுக்கொள்கிறார். தொடர்புக்கு 016-4050414.

Leave a Reply