அந்நியத் தொழிலாளர் விவகாரம்: மலேசியர்களின் நலன் புறக்கணிக்கப்படாது- டத்தோஸ்ரீ சரவணன்

Malaysia, News, Politics

 410 total views,  1 views today

ரா.தங்கமணி


புத்ராஜெயா-
நாட்டிற்குள் அந்நியத் தொழிலாளர்களை தருவிக்கும் விவகாரத்தில் உள்ளூர் தொழிலாளார்களின் நலனை முன்னுறுத்தியே எந்தவொரு முடிவும் எட்டப்படும். உள்ளூர் தொழிலாளர்களின் நலனை புறக்கணித்து விட்டு முதலாளிமார்களின் கோரிக்கைகளுக்கு மட்டுமே நாம் ஒருபோதும் செவிசாய்ப்பதில்லை என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

நாட்டில்ஏற்கெனவே 1.24 மில்லியன் அந்நியத் தொழிலாளர்கள் உள்ளனர். அனுமதி வழங்கப்பட்டு நாட்டுக்குள் புதிதாக 238,000 பேர் வரவுள்ளனர். மொத்தத்தில் 1.5 மில்லியன் அந்நியத் தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.


இன்னும் அங்கீகரிக்கப்பட்ட 14 நாடுகளிலிருந்து 640,000 லட்சம் அந்நியத் தொழிலாளர்கள் தங்களது மருத்துவப் பரிசோதனையை முடித்து அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரின் வருகையால் இவ்வாண்டுக்குள் நாட்டிலுள்ள அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியனாக அதிகரித்து விடும்.

வே இனிமேல் தான் அந்நியத் தொழிலாளர்களை அங்கீகரிக்கும் விவகாரத்தில் மிக கவனமாக செயல்பட வேண்டும். முதலாளிமார்களை பொறுத்த வரையிலும் அதிகமான தொழிலாளர்கள் வேண்டும் என்பதையே எதிர்பார்ப்பர்.
ஆனால் அதே நேரத்தில் மலேசியர்களின் வேலை வாய்ப்பை கவனத்தில் கொண்டே இனி எந்தவொரு முடிவும் எட்டப்படும்.

மலேசியர்களின் நலனை கருத்தில் கொண்டே இனி முடிவுகள் தீர்மானிக்கப்படும் நிலையில் அரசாங்கத்தை மனிதவள அமைச்சையோ குறை கூறுவதில் எவ்வித பயனும் காண முடியாது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்த பின்னர் செய்தியாளார்களிடம் பேசுகையில் டத்தோஶ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.


2.2 மில்லியன் அந்நியத் தொழிலாளர்கள் நாட்டில் வேலை புரியும் பட்சத்தில் ஆள்பலப் பற்றாக்குறை பேச்சுக்கே இனி இடமிருக்காது எனவும் டத்தோஶ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.
அந்நியத் தொழிலாளர் விவகாரம் தொடர்பில் ஜசெகவைச் சேர்ந்த பாகான் டாலாம் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹாம், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் ஆகியோருக்கு டத்தோஶ்ரீ சரவணன் விளக்கமளித்தார்.

Leave a Reply