அந்நிய நாட்டவர்களின் சட்டவிரோத வணிகங்கள் களையெடுக்கப்படும் – கணபதிராவ்

Malaysia, News, Politics

 53 total views,  1 views today

ரா.தங்கமணி


கிள்ளான் –
இங்கு பிழைப்பு தேடி வரும் அந்நியத் தொழிலாளர்கள் ‘முதலாளி’மார்களாக உருவாவதற்கு அடித்தளமாக அமைந்துள்ள கிள்ளான் வணிகத் தளம் உள்ளூர் வணிகர்கள் தளமாக மாற வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.


இங்கு பெரும்பாலான அந்நிய நாட்டவர்கள் வணிகம் செய்து வருகின்றனர். இந்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்தவர்கள் எவ்வாறு வணிகத் துறையில் ஈடுபட்டு ஒரு வர்த்தகராக உருமாற முடிகிறது?


ஊராட்சி மன்றத்திடமிருந்து வர்த்தக லைசென்சுகளை பெறும் உள்ளூர் தரப்பினர் அதனை அந்நிய நாட்டவர்களுக்கு வாடகைக்கு விடுகின்றனர். குறைந்த விலையில் பெறப்படும் லைசென்சை வைத்துக் கொண்டு அதன் மூலம் முதலாளிகளாகவும் மாறுகின்றனர்,’
இதனால் வணிகத் துறையில் ஈடுபடும் உள்ளூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உள்ளூர் வர்த்தகர்களின் நலன் காக்க சட்டவிரோத முறையில் செயல்படும் அந்நிய நாட்டவர்கள் களையெடுக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.


இத்தகைய நடவடிக்கை அவர்களுக்கு எதிரானது அல்ல, மாறாக உள்ளூர் வர்த்தகர்களின் நலன் காக்கும் நடவடிக்கையே ஆகும் என்று அவர் சொன்னார்.

Leave a Reply