அனைத்துப் பாரம்பரியத் தொகுதிகளிலும் ம.இ.கா. போட்டியிடும் ! – மகிழ்ச்சிப் பரவசம் பொங்க ஸாஹிட்டுக்கு நன்றி கூறிய தான் ஸ்ரீ விக்னேஸ்வரன்

Malaysia, News, Politics, Polls

 120 total views,  1 views today

குமரன்

கோலாலம்பூர் – 10/10/2022

தமது அனைத்துப் பாரம்பரியத் தொகுதிகளிலும் பொதுத் தேர்தலில் போட்டியிட ம.இ.கா.வுக்கு தேசிய முன்னணியால் வாய்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விவகாரத்தை மகிழ்ச்சி பொங்க பகிர்ந்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன்.

18 சட்டமன்றத் தொகுதிகளிலும் 9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தங்களின் வேட்பாளர்களை தேசிய முன்னணியின்கீழ் ம.இ.கா. களமிறக்கும் என்பதனை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது.

இந்த முடிவை தேசிய முன்னணியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்ததாகவும் அவருக்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் இன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ம.இ.கா. தேசியப் பொதுப் பேரவையில் தான் விக்னேஸ்வரன் உரையாற்றுகயில் குறிப்பிட்டார்.

முன்னதாக, ம.இ.கா.வின் பணிப்படை அறிமுக விழாவில் கலந்து கொண்ட ஸாஹிட், அனைத்துப் பாரம்பரியத் தொகுதிகளிலும் போட்டியிடுவது குறித்து தமதுரையில் கோடி காட்டி இருந்தார்.

தற்போது , சில கூடுதல் தொகுதிகள் குறித்தும் ம.இ.கா. பேர்ரு வார்த்தை நடத்தி இருப்பதாகவும் ம.இ.கா. மீது தேசிய முன்னணி கொண்ட நம்பிக்கை ஒருபோதும் வீணடிக்கப்படாமல் அனைத்திலும் வெற்றியை நிலை நாட்டுவதாகவும் தான் ஸ்ரீ சொன்னார்.

முந்தைய பொதுத் தேர்தலில் ம.இ.கா.வின் தோல்விக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, தாமதமாக தொகுதி ஒருங்கிணைப்பாளர்களை நியமித்ததுதான் எனக் குறிப்பிட்ட அவர், இப்போது அதுபோன்றத் தோல்வியை தங்களின் பாரம்பரியத் தொகுதிகளில் நேராமல் இருக்கவும் வெற்றியை உறுதிப்படுத்த நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தற்போது ஆக்ககரமாக இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

“எங்களின் செயல்பாடுகளை மக்கள் கூரந்து கவனிக்க வேண்டும். சேவைகளைப் பார்க்க வேண்டும். அவை அனைத்தும் மக்களின் தேவையாகவே இருக்கின்றன. போட்டியிட இருக்கின்ற வேட்பாளர்கள் மீது நம்பிக்கை வைக்கப்பட வேண்டும். மக்கள் முழு மனதாக அவர்களை எற்றுக் கொள்ள வேண்டும்.”

அதே சமயம், போட்டியிட இருக்கின்ற ம.இ.கா. வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களை அடையாளம் கண்டு, நேரடியாக அவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் நினைவுறுத்தினார்.

இந்த வியூகமானது வாக்காளர்களின் உள்ளத்தைத் தொட்டு உணர்ச்சிப்பூர்வமான நெருக்கத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.

மக்களின் பிரச்சனை கவனிப்பதோடு தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளோடு இணைந்தும் பணியாற்ற வேண்டும் என்றார்.

Leave a Reply