அனைத்துலகப் பயிற்றியல் பொருள் உருவாக்கும் போட்டியில் மாலிம் நாவார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி  ஆசிரியர்கள் சாதனை !

Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools, World, World

 149 total views,  1 views today

மாலிம் நாவார் – 9 ஜூலை 2022

கடந்த 17 ஜூன் 2022 முதல் 24 ஜூன் 2022 வரை  நடந்த  அனைத்துலகப் பயிற்றியல்  பொருள் உருவாக்கும் போட்டியில் மாலிம் நாவார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி  ஆசிரியர்கள்  வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தலைமையாசிரியர் ஆ. லோகேஸ்வரியின் தலைமைத்துவத்தில், ஆசிரியர் சி. ஞானஜோதியின் வழிக்காட்டலில் ஆசிரியர்கள் மு.ஜெயந்தி,  பெ.சந்திரபிரியா, திருமதி சோ.சுமித்திரா, மு.வசந்தா, க. சங்கீதவாணி ஆகியோர் இப்போட்டியில் களம் இறங்கி சாதனை படைத்துள்ளனர்.

இயங்கலையில் நடந்த இந்தப் போட்டியில் வழக்கமாக பல்கலைக்கழகங்கள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் மாலிம் நாவார் தமிழ்ப்பள்ளி வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

மாணவர்களுக்குப் புள்ளி வழங்கும் முறையில் புத்தாக்கம் செய்த மாலிம் நாவார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியரின் ஊக்குவிப்பில் ஒற்றுமையாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதனை இது நிறுபித்துள்ளது.

ஆசிரியர்கள் இது போன்ற புத்தாக்கப் போட்டிகளில் களம் இறங்கி செயல்படுவது கற்றல் கற்பித்தலை மேலும் மேம்படுத்துகிறது என்பதனைப் பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்துக் கொண்டார்.

எனவே, மாலிம் நாவார் சுற்று வட்டார மக்கள் தொடர்ந்து தமிழ் பள்ளிக்கு ஆதரவை வழங்கும் வகையில் பிள்ளைகளைத் தமிழ் பள்ளியில் பதிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழ் பள்ளியே நமது தேர்வு.

Leave a Reply