அனைத்துல புத்தாக்கப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றனர் ஆசாட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

Education, Indian Student, Malaysia, News, Tamil Schools

 449 total views,  1 views today

டி.ஆர்.ராஜா

பட்டர்வொர்த்-

1930-களின் ஆரம்ப காலகட்டததில் மின்சார அழைப்புமணி என்பது அனைத்து வீடுகளிலும் ஓர் இன்றியமையாத சாதனமாகக் கருதப்பட்டது. இவ்வகையான மின்சார அழைப்புமணி இன்றும்கூட பரவலாக வீடுகளில் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன அழைப்பு மணியின் தொழில்நுட்பத்தை வைத்து புத்தாக்க முறையில் ‘’விவேக கோரணி நச்சு தடுப்பு அழைப்புமணி ” ( Smart Corrona Doorbell ) உருவாக்கியுள்ளனர் அனைத்துலக புத்தாக்கம், படைப்பாற்றல், தொழில்நுட்ப கண்காட்சி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பினாங்கு, ஆசாட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்.

அண்மையில் நடைபெற்ற இந்த போட்டியில் இப்பள்ளியைச் சேர்ந்த ஜெ.வைஸ்ணவி, பி.அபிநயா, ஜெ.ரியாசினி, எம்.திவ்யா ரஸ்மிகா, ஜெ.ஜெய்சக்திவேல் ஆகிய மாணவர்கள் பங்கெடுத்து இச்சாதனையை படைத்துள்ளனர். மேலும் இப்பிரிவின் சிறந்த வழிகாட்டிக்கான வெண்கல விருதை பள்ளி ஆசிரியர் பிரகாசம் அங்குசாமி பெற்றார்.

சுமார்  நான்கு  ஆண்டுகளாக சிஸ்கோர் நிறுவனம் (syscore)  robotic, ardino, micro bit தொடர்பான பல வகுப்புகள் நடத்தி வருகின்றது. ஓராண்டு காலத்திற்கும் மேலாக  இவ்வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் சிறந்த படைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போட்டிக்குப் பயிற்றுவிக்கப்பட்டனர். இப்புத்தாக்கப் போட்டியின் படைப்புகளை உருவாக்குவதிலும் மாணவர்களைப் பயிற்றுவிப்பதிலும் சிஸ்கோர் நிறுவனம் பெரும் பங்காற்றியுள்ளது. இதன்வழி மாணவர்களை எதிர் காலத்திற்கு தயார்படுத்தி வருவதாக அந்நிறுவன இயக்குநர் காளிதாசன் கூறினார் .

இந்த புத்தாக்க மின்சார அழைப்புமணியை நுண்கட்டுப்படுத்தி (microcontroller) அமைப்புமுறையை பயன்படுத்தி நிறுவியுள்ளனர் . மாணவர்களின்  ‘’விவேக கோரணி நச்சு தடுப்பு அழைப்புமணியை ” (Smart Corrona Doorbell) அனைத்து இல்லங்களிலும் பயன்படுத்தலாம்.

 இதன் பயன்பாடு எப்படி இருக்குமேயானால், யாரேனும் விருந்தாளி அல்லது உணவு விநியோகர் நம் வீட்டு  ‘’விவேக கோரணி நச்சு தடுப்பு அழைப்புமணியின் விசையை அழுத்தும் பொழுது அது உடனே நம் உடல் வெப்பநிலை அளவெடுத்துவிடும். இந்த அளவை அகச்சிவப்பு வெப்பநிலை கருவியினைப் (Infrared Thermometer) பயன்படுத்தி அளக்கப்படும். பின்பு உடல் வெப்பநிலையின் அளவு seven-segment display screen காட்சி திரை மூலம் காட்டப்படும். ஒரு வேளை அந்நபரின் உடல் வெப்பநிலை 37.5°c-ஐ விட அதிகமாக இருந்தால், உடனே அது உடனே அபாய ஒலியை எழுப்பும்.

அதுவே அந்நபரின் உடல் உடல் வெப்பநிலை 37.5°c-ஐ விட குறைவாக இருப்பின் அழைப்பு மணியிலிருந்து வரவேற்பு ஒலியை எழுப்பும். இந்த அமைப்புமுறையின் வழி நாம் நம் இல்லத்திற்கு வருகை புரிவோருக்கு காய்ச்சல் இருக்குமா இல்லையா என்பதை அறிந்துக் கொள்ளலாம். இதன் வழி நாம் நம்மை இந்நோய்க்கிருமியிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவி புரிகின்றது.

நாம் நமது விருந்தினர்களின் உடல் நிலையினை பார்த்ததும் தெரிந்து கொள்ள இயலாது. ஒருவருடைய உடல் வெப்பநிலை அதிகமாயிருப்பின், அவர் உடல் நிலை சீராகும் வரை நாம் அவரை விட்டு சற்று தள்ளியிருப்பது சாலச் சிறந்தது. முக்கியமாக நம்முடன் இருக்கும்  முதியோரும்ம் குழந்தைகளும் இந்த நோய்க்கிருமியினால் அதிகம் பாதிக்கப்படுவதால், நாம் எப்பொழுதும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இப்பிரச்சினையை களைவதற்கு நாம் நம் இல்லத்தில் ‘’விவேக கோரணி நச்சு தடுப்பு அழைப்புமணியை பயன்படுத்தி விருந்தினர்களின் உடல் நிலையை அறிந்துக் கொள்ளலாம். இக்கருவியில் எடுக்கப்படும் உடல் வெப்பநிலை மிக துல்லியமாக இருப்பதால் இதனை ஒரு திறமையான மற்றும் நம்பகத்தன்மையுடைய கண்டுபிடிப்பு. அதீத வெப்பநிலைக்கு அபாய ஒலி மற்றும் சாதாரண வெப்பநிலைக்கு வரவேற்பு ஒலி என்று வெவ்வேறு ஒலியினை எழுப்புவதால் இல்லத்தில் இருப்பவர்கள் எவ்வேளையிலும் சுதாகரிப்புடன் இருக்கலாம். 

இதனிடையே இதுகுறித்து பேசிய பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி கு.வசந்தி மாணவர்கள் சாதனை புரிவதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் அனைவருக்கு தமது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார் ,

Leave a Reply