அனைத்து துறைகளுக்கும் அந்நியத் தொழிலாளர்களை தருவிக்க அமைச்சரவை அனுமதி
346 total views, 1 views today
கோலாலம்பூர், டிச. 10-
தோட்டத் துறை உட்பட அனைத்து தொழில் துறைகளுக்கும் அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
வங்களாதேச தொழிலாளர்களை தருவிப்பதற்கு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
தோட்டத்துறை மட்டுமல்லாது விவசாயம், தொழிற்சாலை, சேவை துறை, ஈய லம்பம், குவாரி, கட்டுமானம், வீட்டு வேலை போன்றவற்றுக்கு அந்நியத் தொழிலாளர்களை தருவிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அது மட்டுமல்லாது அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 1ஆம் தேதி வரை முதலாளிமார்கள் லெவி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் அவர் டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.