
அனைவரையும் அரவணைக்கும் பொங்கல் விழா- குணராஜ் பெருமிதம்
239 total views, 1 views today
ரா.தங்கமணி
கிள்ளான் –
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் குணராஜ் ஏற்பாட்டில் ஒற்றுமை பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்தியர்களின் பாரம்பரிய விழாவாக கருதப்படும் பொங்கல் விழா, உழவர்களின் பெருவிழாவாக இருந்தாலும் இந்நாட்டில் அது ஒரு சமூகத்தின் பாரம்பரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் விழா இந்தியர்களின் விழாவாக பிரதிபலித்தாலும் அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் விழாவாக கடைபிடிக்கப்படுகிறது.

ற்போது நாட்டில் ஒற்றுமை அரசாங்கத்தின் ஆட்சி நீடிக்கிறது. மக்களின் நலனுக்காக அரசியல் பேதங்களை களைந்து தலைவர்கள் ஒன்றிணைகின்றனர்.
அதேபோல் மக்களும் இனம், மதத்திற்கு அப்பால் பட்டு ஒன்றிணைய வேண்டும் எனும் நோக்கில் ஒற்றுமை பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக குணராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொங்கல் வைத்தல், கோலப்போட்டி, மயிலாட்டம், தோரணம் பின்னுதல் போன்ற பல்வேறு அங்கங்கள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.