அன்பரசன் சண்முகத்திற்கு ’பெரியார் பெருந்தொண்டர்’ விருது ! – மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் வழங்கியது

Malaysia, News

 69 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 30 செப் 2022

கோலாலம்பூரில், தான்சிறீ’ டத்தோ, கே.ஆர். சோமா அரங்கில், ‘அறிவு ஆசான்’ தந்தை பெரியார் 144வது பிறந்தநாள் – சமூகநீதி நாள் விழாவை முன்னிட்டு ’பெரியார் பெருந்தொண்டர்’ எனும் உயரிய விருதை அன்பரசன் சண்முகத்திற்கு மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் வழன்ங்கியது.

கடந்த 25.9.2022இல், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவ்வமைப்பின்தேசியத் தலைவர் நாக.பஞ்சு முன்னிலையில், கழக கொள்கைப்பரப்புக்குழு தலைவரும், கழக மதியுரைஞருமான ’கொள்கைச்சுடர்’ இரெ.சு. முத்தையா’ அவ்விருதை அன்பரசனுக்கு வழங்கினார்.

அவ்வேளையில், மானமிகு. ச.அன்பரசன் நமது சமுதாயத்திற்கும் கழகப் பணிகளுக்கும் சுயமரியாதைக் கொள்கையோடும் தந்தை பெரியார் பணிகளைத் தொடர்ந்து, ஆற்றிவரும் தொண்டறத்தைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பேருரையையும் சபாய் சட்டமன்ற உறுப்ப்பினர் தமிழச்சி காமாட்சி துரைராஜு தொடக்க உரையைம் ஆற்றி அவ்விழாவை மேலும் எழுச்சி பொங்கச் செய்தனர்.

Leave a Reply