அன்வாரின் அமைதியால் ஆதரவை தேசிய முன்னணிக்கு மாற்றிக் கொண்டேன் ! – வேதமூர்த்தி

Malaysia, News, Politics, Polls

 69 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 26/10/2022

தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு மலேசிய முன்னேற்றக் கட்சியின் (MAP) தலைவர் பொன் வேதமூர்த்தி ஏற்படு செய்திருந்த திரந்த இல்ல விருந்தோம்பலில் அம்னோ – தேசிய முன்னணியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி கலந்து கொண்டார். அந்த நிழற்படத்தை பொன் வேதமூர்த்தி தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடியுடன் மிகவும் நெருக்கமான நட்புடன் அவர் அந்த நிழற்படத்தில் காணப்பட்டார்.

ஹிண்ட்ராஃப் – பக்காத்தான் ஹராப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியின் தொடர் ஒத்துழைப்பு நாடறிந்ததே. குறிப்பாக, இந்திய சமூகத்தின் அரசியல் எழுச்சியையும் இங்கு நம்மால் மறந்து விட முடியாது. அதன் அடிநாதம் – ஹிண்ட்ராஃப்மதற்கு மையப்புள்ளியாக விளங்கியர்களில் மிக முக்கியமானவர் பொன் வேதமூர்த்தி.

அவரது இந்த திடீர் மாற்றம் குறித்து பலர் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், அவ்விவகாரம் குறித்து பொன் வேதமூர்த்தி ஆகிங்லத்தில் விளக்கம் கொடுத்து காணொலி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அவரது விளக்கம்:

நம்பிக்கைக் கூட்டணியில் இணைய இரண்டு ஆண்டுகளுக்கே எனது விருப்பத்தை அவர்களிடத்தில் தெரிவித்திருந்தேன். ஆனால், நம்பிக்கைக் கூட்டணியிடமிருந்து எந்தவிதமான பதிலுமே கிடைக்கவில்லை. அவர்களிடம் அமைதி மட்டுமே பதிலாக இருந்தது.

இதனால், நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் அன்வார் இபுராகிமுக்கு எனது ஒத்துழைப்பு வேண்டாம் என நான் முடிவு செய்வதற்கு வழி வகுத்தது. எனக்கு வேறு வழியும் இல்லை. ஆகவே, நான் பிரதிநிதிக்கும் சமூகத்தின் நலன் கருதி, அவரது முடிவை மதித்து நான் நகர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் நான் தொடங்கியப் போராட்டத்தைத் தொடருவதும் அதனை நிறைவு செய்வதுமே எனது முதன்மை நோக்கமாகும்.

ஹிண்ட்ராஃப் பேரணிக்கு முன்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஹிண்ட்ராஃப் செயல்படத் தொடங்கி விட்டது.

எனது நோக்கங்கள்

  • தேசியப் பொருளாதார நீரோட்டத்தில் இந்தியர்களைக் கொண்டு செல்வது, அரசாங்கத்தில் இந்தியர்களை முழுமையாகப் பணியமர்த்தப்படுவது
  • அரசாங்கம் – தனியார் துறையில் இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துதல், இந்திய சமுதாயத்தில் நிலவியுள்ள பெரும் விழுக்காட்டத்தை தஆக்கியிருக்கும் வறுமையை ஒழித்தல்
  • உலக வேலைச் சந்தையில் திறன்மிக்கவர்களாக குறிப்பாக, தொழிற்புரட்சி 4.0யில் ஆளும் திறன் கொண்டவர்களாக இந்தியச் சமுதாய இளைஞர்களை உருவாக்குதல்
  • பள்ளிக் கூடக் கல்வியைக் கைவிட்ட இந்திய இளைஞர்களுக்கு மாற்று வழியாக திறன் பயிற்சிகளை ஏற்படுத்தி நாட்டின் அடிப்படை ஊதியத்தைக் காட்டிலும் 3 மடங்கு வருமானத்தைப் பெற வழி வகை செய்தல்
  • இந்திய சமூகப் பொருளாதார மாற்றத்தை சுமூகமாக நடைமுறைப்படுத்துதல்

இவை அனைத்தையும் நனவாக்க மெக காலத்திற்கு முன்பே அதற்கானத் திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறேன். இந்திய சமூக எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களை நான் அரசியலாக்க விரும்பவில்லை.

பிரதமராக யார் பதவியேற்றாலும் இந்திய சமூகம் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் எனது இந்த நோக்கங்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும் எந்தப் பிரதமர் உதவுகிறாரோ அவருக்கு ஆதரவளிப்பதே எனக்கு முக்கியம்.

அந்த நோக்கத்தை நனவாக்க அம்னோ – தேசிய முன்னணி தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடியுடன் இணைந்து நனவாக்குவதர்கு உழைத்து வருகிறேன்திந்திய சமூகத்திற்கான எனது அனைத்துத் திட்டங்களுக்கும் ஸாஹிட் ஹமிடி உடன்பட்டிருக்கிறார்.

எனவே, எம். ஏ, பியும் நானும் அகமாட் ஸாஹிட் ஹமிடியின் தலைனையின் கீழ் இருக்கும் தேசிய முன்னணியை ஆதரிக்கிறேன்.

இவ்வாறு அவர் தமது காணொலியில் குறிப்பிட்டார்.

பொன். வேதமூர்த்தியின் இந்த மாற்றம் பல விமர்சனங்களை இணையவாசிகளிடமிருந்து பெற்று வந்துள்ளது.

Leave a Reply