அன்வாருடன் இணைந்து பணியாற்ற ரபிஸிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்

Malaysia, News, Politics

 201 total views,  3 views today

பெட்டாலிங் ஜெயா-

பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் துணைத் தலைவராக இணைந்து பணியாற்ற ரபிஸி ரம்லிக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். ரபிஸி அரசியல் களத்திற்கு திரும்புவதன் மூலம் அன்வாரை பிரதமராக நியமிப்பதற்கான போராட்டத்தை தொடர முடியும் என்று பிகேஆர் இளைஞரணி செயலாளர் அஹ்மாட் சுக்ரி அப்துல் ரசாக் தெரிவித்தார்.

அவர் அரசியல் அரங்கத்திற்கு நுழைந்தால் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதோடு துணைத் தலைவராக தமது பணியை சிறப்பாக செய்து முடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

தலைவருக்கு பின்னால் இரண்டாம் நிலை தலைவராக அவருக்கான வாய்ப்பை வழங்காவிட்டால் அது நமக்கு பேரிழப்பு என்று அவர் சொன்னார்.

Leave a Reply