அன்வார் அலை; பேராவை பிஎச் தக்கவைக்கும்- முகமட் அராஃபாட்

Malaysia, News, Politics

 73 total views,  1 views today

ரா.தங்கமணி

ஈப்போ-

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதால் இம்முறை பேரா மாநிலத்தை பிஎச் கூட்டணி தக்கவைத்துக் கொள்ளும் என்று உலு கிந்தா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராஃபாட் வரிசை முகமட் தெரிவித்தார்.

டத்தோஶ்ரீ அன்வாரின் பேரா மாநில பிஎச் கூட்டணிக்கு புது தெம்பாக அமைந்துள்ளது. மக்களும் டத்தோஶ்ரீ அன்வாரை வரவேற்கின்றனர். இந்ந வரவேற்பு வரும் பொதுத் தேர்தலில் பலமாக எதிரொலிக்கலாம்.

இரு முறை பேரா மாநில அரசை பக்காத்தான் கூட்டணி கைப்பற்றிய போதில் அவை இல்லாமலே சில மாதங்களிலேயே ஆட்சி கவிழ்ப்பு, ஆட்சி மாற்றம் ஆகியவை நடந்துள்ளது. பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்ற முடியாமல் போனதாலேயே இச்சம்பவம் நிகழ்ந்த நிலையில் வரும் பொதுத் தேர்தலில் 31க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல பிஎச் கூட்டணி இலக்கு வைத்துள்ளது.

டத்தோஶ்ரீ அன்வாரின் அலை பேரா மாநிலத்தில் வெகுவாக வீசும் என்பதால் இம்முறை இம்மாநிலத்தில் வலுவாக ஆட்சியை பிஎச்  கூட்டணி தக்க வைக்கும் என்று அவர் சொன்னார்.

Leave a Reply