
அன்வார், அஸுமுவை எதிர்கொள்ளும் தேமு வேட்பாளர் யார்?
240 total views, 1 views today
ரா.தங்கமணி
ஈப்போ-
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.
தம்புன் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மாட் பைசால் அஸுமு இருந்து வருகிறார்.
டத்தோஸ்ரீ அன்வாரும் டத்தோஸ்ரீ பைசால் அஸுமுவும் தம்புனில் போட்டியிடுவது உறுதியாகி விட்ட நிலையில் தேசிய முன்னணி சார்பில் அங்கு போட்டியிடும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.
கடந்த பொதுத் தேர்தலில் தேமு வேட்பாளராக அப்போது இரண்டாவது நிதியமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ உஸ்னி அனாட்ஸ்லா தம்புனில் போட்டியிட்டு அஸுமிவிடம் தோல்வியை தழுவினார்.
விளம்பரம்
