அன்வார் ஏன் தம்பூனுக்குப் போனார் ?

Malaysia, News, Politics, Polls

 138 total views,  1 views today

– குமரன் –

தம்பூன் – 22/10/2022

போர்ட் டிக்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அன்வார் இபுராகிம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தம்பூன் நாடாளூமன்றத் தொகுதியில் போட்டியிட இருப்பதாக ஈப்போவின் நடந்த நம்பிக்கைக் கூட்டணியின் மாநாட்டில் அறிவித்திருந்தார்.

அவ்வாறான அறவிப்புக்கு என்ன காரணம் ?

பேரா மாநிலத்தில் மிகவும் கடினமான தொகுதியாக தம்பூன் நாடாளுமன்றத் தொகுதி பார்க்கப்படுகிறது.

அங்கு 65 விழுக்காடு மலாய்க்காரர் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். மிக முக்கிய நகரப் பகுதியாக இல்லை என்றாலும் Lost World of Tambun சுற்றுலா தலங்கள் கொண்ட இடமாக விளங்குகிறது.

நம்பிக்கைக் கூட்டணி வழியாக பேரா மாநிலத்திற்குள் அன்வார் இபுராகிம் நுழைய திட்டம் தீட்டி இருந்தால், கோலாகங்சார், பாடாங் ரெங்காஸ், பாகான் டத்தோ போன்ற எளிதாக வெல்லக் கூடிய இடங்கள் இருந்தாலும், அன்வார் தம்பூனைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றத் தொகுதி பாகான் டத்தோ. ஆனால், 2022 ஆம் ஆண்டில் நிலைமை வேறாக இருப்பதை மறுக்கவியலாது.

பாரம்பரியமாக தம்பூன் தொகுதி அம்னோவின் கோட்டையாக இருந்து வந்தது. ஆகக் கடைசியாக, முன்னாள் இரண்டாவது நிதி அமைச்சராக இருந்த அகமாட் ஹுஸ்னி நம்பிக்கைக் கூட்டணியில் இருந்த பெர்சத்துவின் அகமாட் ஃபைஸால் அஸுமுவின் தோல்வி கண்டார்.

2018ஆம் ஆண்டில் அத்தொகுதியில் 107,763 பதிவு பெற்ற வாக்காளர்கள் இருந்தனர். அம்னோ / தேசிய முன்னணியும் பாஸ் கட்சியை உட்படுத்திய பெசத்து / தேசியக் கூட்டணியும் அங்கு களமிறங்கலாம் எனும் நிலையில் கடுமையானப் போட்டி நிலவும் என்பதில் ஐயமில்லை. எனவே, தம்பூன் அன்வாருக்கு மிகவும் எளிதானத் தொகுதி அல்ல எனத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக தமது தொகுதியான போர்ட் டிக்சனை மிகவும் நல்ல முறையில் நிர்வகித்து வந்திருந்தாலும், அன்வார் தற்போது தம்பூனுக்குச் செல்லும்போது அவர் அனைத்தையும் முதலில் இருந்து தொடங்கியாக வேண்டியக் கட்டாயம் இருக்கிறது.

பல திட்டங்களும் நேரடியாகக் களத்தில் இறங்க வேண்டிய நிலை. போர்ட் டிக்சனைக் காட்டிலும் இரட்டிப்பு முயற்சி எடுக்க வேண்டும்.

தமது போராட்டத்தின் தளபதியாக எளிதான வழிமுறையைக் கையில் எடுக்காமல் அனைத்து சவால்களையும் உள்ளடக்கியத் தொகுதியைத் தேர்ந்தெடுத்து களமிறங்குகிறார் என்பது இதில் இருந்து தெரிகிறது.

அதே சமயம், அடுத்து பிகேஆர் – இல் இருந்து யார் போர்ட் டிக்சன் தொகுதியில் போட்டியிட்டாலும் அவர் அங்கு வெற்றீ பெற முடியும் என்கிற அளவுக்கு அடித்தளத்தையும் செய்து வைத்திருக்கிறார் அன்வார்.

இப்படி, பரிட்சயமே இல்லாதப் புதியத் தொகுதியை ஸாஹிட் ஹமிடி, முகிதீன் யாசின், ஹாடி ஹவாங், துன் மகாதீர் போன்ற இதரக் கட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுப்பார்களா என்பது சந்தேகம்தான்.

பெர்மாத்தாங் பாவோவில் இருந்து போர்ட் டிக்சனுக்கும் இவ்வாறுதான் பயணித்திருப்பார் என நம்மால் கணிக்க முடிகிறது.

தம்பூன் நாடாளுமன்றத் தொகுதி
மலாய்க்காரர்கள் :  65.8%
சீனர்கள் : 23.7%
இந்தியர்கள் : 9.0%
மற்றவர்கள் : 1.5%,

ஏறத்தாழ மலேசியாவின் மக்கள் தொகையின் பிம்பமாக தம்பூன் தொகுதி மக்கள் தொகையும் அமைந்துள்ளது எனலாம். கடுமையானப் போட்டி நிலவலாம் எனக் கூறப்பட்டாலும் அனைத்து மக்களுமானப் போராட்டம் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அன்வாருக்கு வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது.

புதிய தொகுதி, பிரதமர் வேட்பாளர் எனப் பல கூடுதல் கூறுகளில் அன்வாரின் வெற்றி அதிகப்படுத்தலாம்.

அதே சமயம், தங்கள் பிரதமர் வேட்பாளர் வெற்றி பெற நம்பிக்கைக் கூட்டணி அதிகம் கவனம் செலுத்தும்.

இதனிடையே, இரண்டு அமைச்சர்கள் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதைக் காட்டிலும் நாட்டின் பிரதமர் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் தம்பூன் வாக்காளர்கள் வரவேற்பார்கள், மகிழ்ச்சி அடைவார்கள்.

அம்னோவின் தலைவர் ஸாஹிட் பேரா மாநில மைந்தனாக இருந்தாலும் பேரா மாநிலத்தைத் தமது போராட்டத்தின் முதன்மை எடுத்துக் காட்டு மாநிலமாகவும் 15வது பொதுத் தேர்தலில் அம்மாநிலத்தைக் கைப்பற்றி அவருக்கும், அகமாட் ஃபைஸால் அஸுமு ஆகியோருக்குப் பெரும் பதிலடியை அன்வார் கொடுக்க அன்வார் நிச்சயம் பல அதிரடியான நடவடிக்கைகளை முன்னேடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

நிலைமை இவ்வாறு இருக்க, அன்வாரின் இந்த முடிவை வரவேற்றிருக்கும் பேஜாவின் நடவடிக்கை என்னவாக இருக்கும் ? தொடர்ந்து தற்காப்பாரா ? காத்திருப்போம் !

Leave a Reply