அபாயகர நிலையில் ஊழியர் சேமநிதி : பணி ஓய்வு பெற இருப்பவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியா ?

Economy, Local, Malaysia, News

 88 total views,  2 views today

கோலாலம்பூர் – 14 ஆகஸ்டு 2022

மிகவும் குறைந்த அளவில் தங்களின் சேமநிதி இருப்பதைத் தொடர்ந்து பணி ஓய்வை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து கவலையில் இருக்கிறார்கள். அதிலும்,

பணி ஓய்வுக்குப் பிறகு தங்களின் குடும்பத்தின் செலவுகளைக் கவனித்துக் கொள்ள தங்களின் ஊழியர் சேமநிதி போதாது என்பதால் பலர் கவலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறானச் சூழலைக் கையாள தற்போது இருக்கின்ற ஊழியர் சேமநிதியை வியாபார முதலீடாகக் கொள்ள சிலர் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தங்களின் பிள்ளைகள் படிப்பு செலவை ஈடுகட்டத் திட்டங்கள் வலுத்து வருகின்றன.

இன்னும் 5 ஆண்டுகளில் வணிகத் துறையில் காலடி எடுத்து வைக்க  இருக்கும் தொழிற்சாலை ஊழியரான 55 வயது கிருஷ்ணன் இது குறித்து தெரிவிக்கயில், தற்போதைய ஊழியர் சேமநிதி மாதக் கட்டணத்தை அதிகரிக்க எண்ணம் கொண்டுருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஒரு வேளை அந்தச் சேமிப்பு போதவில்லை என்றால் தற்போதையப் பணியில் இரூந்து ஓய்வு பெற்ற பிறகும் தாம் வேலை செய்ய வேண்டியக் கட்டாயத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால், மாதந்திர ஊழியர் சேமநிதிக் கட்டணத்தை அதிகரிக்க நினைத்தாலும் தர்போதைய வாழ்க்கைச் செலவினங்கள் அதற்கு வழி விடும் நிலையில் இல்லை.

ஆனால், ஒரு சிலர் எந்தச் சூழலிலும் இன்னமும் தங்களின் ஊழியர் சேமநிதியை மீட்காத நிலையில், பெரும்பான்மையினர் சந்திக்கும் கவலையான நிலையை இவர்கள் சந்திக்கப்போவதில்லை.

இவ்விவகாரம் தொடர்பில் கடந்த ஆகஸ்டு 9 ஆம் நாள் நிதி துணை அமைச்சர் ஷாஹார் அப்துல்லா தகவல் அளிக்கயில், 55 வயதான 3.2 மில்லியன் ஊழியர் சேமநிதி உறுப்பினர்கள் சேமிப்பு நிலை ரிம 1,000க்கும் குறைவாக இருக்கின்றது என்றார்.

அதே வயதுப் பிரிவைச் சேர்ந்த 6.62 மில்லியன் பேர் ரிம 10,000க்கும் குறைவானச் சேமிப்பைத் தங்களின் கணக்கில் கொண்டுள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட முடக்கத்தைச் சமாளிக்க i-Lestari, i-Sinar, i-Citra போன்றத் திட்டங்களின் வழி உறுப்பினர்கள் தங்களின் கணக்கில் இருந்து பணம் மீட்க அனுமதி வழங்கப்பட்டதைத் தொடன்ர்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனலாம்.

Leave a Reply