
அமெரிக்காவில் வேகமாக பரவும் ஒமைக்ரோன் பிஏ-2
421 total views, 1 views today
நியூயார்க்-
அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஜனவரி மாதம் பரவியது. அதன்பின் அங்கு கொரோனா பாதிப்பு வேகமெடுத்தது.
ஒமைக்ரானின் துணை வகைகளான பிஏ.1 மற்றும் பிஏ.2 உருமாறிய வைரஸ்கள் பரவியது. இதில் பிஏ.1 வகை வைரஸ் பெரும்பாலான நாடுகளில் பரவி இருந்தது. அதன்பின் சில நாடுகளில் மட்டும் பிஏ.2 வைரஸ் காணப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றின் மற்றொரு உருமாறிய வகையான பிஏ.2 வைரசால் பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி பாசி கூறியதாவது:-
ஒமைக்ரான் வைரசின் புதிய உருமாறிய வகையான பிஏ.2 வைரசால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும். புதிதாக பாதிக்கப்படுபவர்களில் 30 சதவீதம் பேர் புதிய வகை உருமாறிய ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுபவர் என கணிக்கப்பட்டுள்ளது.
இது ஒமைக்ரானைவிட 60 சதவீதம் அதிக பரவும் தன்மை கொண்டது. ஆனாலும் அதிக தீவிரம் இல்லாதது என கருதப்படுகிறது.