அமெரிக்காவில் 1,200 விமானங்கள் ரத்து

News, World

 238 total views,  1 views today

நியூயார்க்-

அமெரிக்காவில் நேற்று மட்டும் 1200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 1500 விமானங்களும், 27-ந் தேதி 2300 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

மோசமான வானிலை மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது, இதற்கு முன்பு இதுபோன்ற நிலை ஏற்பட்டதில்லை. இப்போதுதான் அதிக அளவில் விமானங்களை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது, என்றனர்.

Leave a Reply