அமெரிக்காவை திணறடிக்கும் டெல்டா வைரஸ்

News, World

 174 total views,  2 views today

வாஷிங்டன்-

உலகம் முழுவதும் டெல்டா வகை கோவிட் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் டெல்டா வைரஸ் பரவல், அங்குள்ள மருத்துவ சுகாதார கட்டமைப்பை திணற வைத்துள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டினில் 24 லட்சம் பேர் வாழ்கின்றனர். இங்குள்ள மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். மருத்துவ கட்டமைப்பு பெரும் அழுத்தத்தை சந்தித்துள்ளது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று மாகாண பொது சுகாதார மருத்துவ இயக்குநர் டெஸ்மர் வாக்ஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply