அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது

News, World

 131 total views,  3 views today

நியூயார்க்-

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கிளாமிஸ் பகுதி அருகே பறந்து சென்ற ராணுவ விமானம் ஒன்று திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் அந்த விமானம் நொறுங்கியது.

உடனே அங்கு மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் மெக்சிகோ எல்லையில் 35 கிலோமீட்டர் தூரத்தில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விமான விபத்தில் உயிரிழப்பு, சேதம் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. கடந்த மாதம் நார்வேயில் அமெரிக்க ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply