அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை- ஜோ பைடன் அதிரடி

News, World

 104 total views,  1 views today

வாஷிங்டன்-

‛‛அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து போர் தொடுத்து வருகிறது. இருநாட்டு வீரர்களுக்கும் இடையே சண்டை வலுத்துள்ளது. போர் தொடர்பாக ரஷ்யா-உக்ரைன் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தாலும் அதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் பலமுறை வலியுறுத்தியும் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் போர் நடவடிக்கையை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். இதனால் ஜோ பைடன் கடும் கோபத்தில் உள்ளார். மேலும் அவர் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறார். இதன் காரணமாக உலகில் உள்ள பிறநாட்டு தலைவர்களுடன் பேசி ரஷ்யாவுக்கு எதிராகவும், உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் எடுக்க அமெரிக்க வலியுறுத்தி வருகிறது.
ரஷ்யாவை தனித்து விடுவதில் ஜோ பைடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒருபகுதியாக அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க ஜோ பைடன் தடை விதித்துள்ளார். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையில் ஜோ பைடன் பேசுகையில், ‛‛ரஷ்யாவின் விமானங்கள் அமெரிக்காவின் வான்வெளியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா விமானங்களுக்கு எங்களது வான்வழியை மூடுவதன் மூலம் நட்பு நாடுகளுடன் இணைந்துள்ளோம். ரஷ்யாவை இன்னும் தனிமைப்படுத்தி, பொருளாதாரத்தின் மீது கூடுதல் சுமையை வழங்குவோம்”என்றார்.

ஐ சேனல் செய்திகள் 1/3/2022

Leave a Reply