அம்னோ ஆட்சிக்கு வந்தால் 2023 வரவு செலவுத் திட்டம் முழுமையாக  செயல்படுத்தப்படும்  ! – இஸ்மாயில் சப்ரி

Economy, Local, Malaysia, News, Politics, Polls

 132 total views,  1 views today

– குமரன் –

பெரா – 16/10/2022

மீன்டும் அம்னோ ஆட்சி அமைக்குமேயானால், 2023 வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்ட அத்தனை கூறுகளும் செயல்படுத்தப்படும் என இடைகாலப் பிரதமராகப் பொறுப்பேற்றிக்கும் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

கடந்த அக். 7 ஆம் நாள் அறிவிக்கப்பட்ட ரிம 372.2 பில்லியன் மதிப்பிலான 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கத்திடம் போதிய நிதி இருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் முழு ஆதரவை மட்டும் அந்த வரவு செலவுத் திட்டம் இன்னும் பெறவில்லையே தவிர, நடைமுறைப்படுத்த போதிய நிதி உண்டு என அவர் மேலும் சொன்னார்.

மிகச் சிறப்பான இந்தத் திட்டம் முழுமையாக நடத்தப்பட வேண்டும் என்றால், எங்களுக்கு வாக்களியுங்கள், அப்போதுதான், இதே வரவு செலவுத் திட்டத்தை மீண்டும் தாக்கல் செய்து அதனை அங்கீகரிக்கவும் செய்ய முடியும்.

முன்னதாக, அறிவிக்கப்பட்ட ஆந்த வரவு செலவுத் திட்டத்தை நடப்புக்குக் கொண்டு வர அரசாங்கத்திடம் போதிய நிதி இருக்கிறதா என கெராக்கான் தானா ஆயேர் எனப்படும் ஜிதிஏ தோற்றுநர் டாக்டர் துன் மகாதீர் கேள்வி எழுப்பியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தனர்.

அனைத்து நிலை மக்களைக் கருத்தில் கொண்டு அந்த  வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கி இருப்பதாகவும் ஒரு சில தரப்பினர் கூறுவது போல் குறிப்பிட்ட சில “பெரும்புள்ளி”களின் நன்மைக்காக உருவாக்கப்பட்டதல்ல என்றார் இஸ்மாயில் சப்ரி.

Leave a Reply