
அரசாங்கம் சட்டத்தை மீறுக்கிறதா ? அரசு அதிகாரிகள் கண்டிக்க வேண்டும் ! வழிகாட்ட வேண்டும் ! – பிரதமர்
109 total views, 1 views today
குமரன் | 16-1-2022
நடப்பில் இருக்கும் ஒற்றுமை அரசாங்கம் சட்ட மீறலைச் செய்தால் அரசு அதிகாரிகள் கண்டிக்க வேண்டும் என பிரதமர் அன்வார் இபுராகிம் தெரிவித்தார்.
பிரதமர் துறை அதிகாரிகளை இவ்வாண்டு சனவரி மாதக் கூட்டத்தில் சந்தித்தபோது பேசிய அவர் குறிப்பிடுகயில், அமைச்சர்களை மட்டும் அல்ல நிதியமைச்சை ஏற்றிருக்கும் தம்மையும் விமர்சிக்கவும் விதிமீறலை மேற்கொள்ள நேர்ந்தால் கண்டிக்கவும் எடுத்துரைக்கவும் அரசு அதிகாரிகள் தயங்கக் கூடாது எனக் குறிப்பிட்டார்.
அமைச்சர்களின் ஆணையை அரசு அதிகாரிகள் அப்படியே அடிபணிந்து ஏற்றுக் கொண்டு செய்து விடுகிறார்கள். ஆனால், அந்த ஆணை அமைச்சரின் அதிகார மீறலோ சட்டமீறலோ இருந்தால் அரசு அதிகாரிகள் துணிந்து வழிகாட்ட வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.
நாட்டின் ஆட்சியின் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வர அமைச்சர்களும் பொதுச் சேவைத் துறை ஊழியர்களும் பாடுபட வேண்டுமே அன்றி பதவி சொகுசில் நாற்காலியை நிறப்பிக் கொண்டிருக்க வேண்டாம் என அவர் மேலும் வலியுறுத்தினார்.