அரசியல் நிலவரம் சரியில்லை; நாடாளுமன்றத்தைக் கலைப்பதைத் தவிர வேறு வழியுமில்லை !

Malaysia, News, Politics, Polls

 108 total views,  2 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 10/10/2022

தற்போதைய அரசியல் நிலவரத்தை அடிப்ப்டையாகக் கொண்டு பார்க்கும்போது, நாடாளுமன்றத்தைக் கலைத்து 15வது பொதுத் தேர்தலுக்கு வழிவிடுவதைத் தவிர மாமன்னருக்கு வேறு வழியில்லை என தேசிய அரண்மனை தெரிவித்துள்ளது.

அரசு முத்திரைக் காப்பாளர் அகமாட் ஃபாடில் ஷாம்சுடின் தெரிவிக்கயில், வலுவான நாட்டிற்கு அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார மேம்பாடு. மக்களின் நலன் ஆகியவற்றைக் காக்க வலுவான நாடாக இருக்க வேண்டும் என மாமன்னர் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

எனவே, நவம்பர் மாதத்தில் ஏற்படும் பருவக் காற்று மாற்றம் ஏற்பட இருக்கின்ற நிலையில், தேர்தல் ஆணையம் மிக விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என மாமன்னர் தெரிவித்தார்.

அதே நேரம் மலேசிய மக்களை எந்த விதமான பேரிடரும் துயரத்தில் ஆழ்த்தி விடக் கூடாது என அனைவரும் இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் என அவர் குறிப்பிட்டார்.

நேற்று நண்பகல் 12.00 மணி அளவில் மாமன்னரப் பிரதமர் சந்தித்தார்.

Leave a Reply