அரசியல் ‘விபச்சாரிகளை’ விட பிச்சைக்காரர்களாய் இருப்பது மேலானது – தான் ஸ்ரீ விக்னேஸ்வரன்

Uncategorized

 101 total views,  3 views today

கோலாலம்பூர் – 20 ஆகஸ்டு 2022

அரசியல் ‘விபச்சாரிகளை’ விட பிச்சைக்காரர்களாக இருப்பது எவ்வளவோ மேலானது என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ நஸ்ரிக்கு பதிலடி கொடுத்தார் மஇகாவின் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்.

15ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய தொகுதிகள் மஇகாவுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கை தொடர்பில் அறிக்கை விடுத்த டத்தோஸ்ரீ நஸ்ரி, மஇகா குழி தோண்டி புதைக்கப்பட்டதாகவும் அம்னோ, மலாய்க்காரர்கள் ஆதரவு இல்லையென்றால் தாப்பாவில் கூட மஇகா வென்றிருக்க முடியாது எனவும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த விக்னேஸ்வரன், அரசியல் விபச்சாரிகளை விட பிச்சைக்கார்ரகளாய் இருப்பது எவ்வளவோ மேலானது.

அரசியலில் டத்தோஸ்ரீ நஸ்ரி எப்படி பட்டவர் என்பதை அனைவரும் அறிவர். ஆதலால் அவரது கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல.

இதனிடையே, மஇகா இந்தியல்களின் ஆரதவை இழந்து விட்டது என்ற நஸ்ரியின் கருத்தை மறுத்த விக்னேஸ்வரன், மலாக்கா, ஜோகூர் மாநில இடைத் தேர்தல்களில் மஇகா அடைந்துள்ள வெற்றியே இந்தியர்களின் ஆதரவு மஇகாவுக்கு உள்ளது என்பதற்கான சான்றாகும் என்று மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply