அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதா ? இப்போது அதற்கு வாய்ப்பில்லை ! – பொருளாதார வல்லுநர்கள்

Malaysia, News

 72 total views,  1 views today

பெட்டாலிங் ஜெயா – 13 ஆகஸ்டு 2022

ஊதிய உயர்வுக்கு பொதுச் சேவைத் துறை ஊழியர்கள் தகுதி பெற்றிருந்தாலும்கூட, நாட்டின் கடன், ஊழல் நிலை, நிதி நிர்வாகத்தில் எற்பட்டக் குறைபாடு ஆகியவற்றால் அதனை சாத்தியப் படுத்த முடியவில்லை என இரு பொருளாதார வல்லுநர்கள் கூறி இருக்கின்றனர்.

மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நஸாரி இஸ்மாயில் இது குறித்து கருத்துரைக்கயில், வாழ்க்கைச் செலவினங்கள் உயர்வால் ஊதிய உயர்வுக்கு அரசாங்கத்தின் கீழ் நிலை ஊழியர்கள் தகுதி பெற்றிருந்தாலும்கூட, புத்ராஜெயாவால் அதனை செயல்படுத்த முடியவில்லை என்றார்.

அரசாங்கத்தின் கான் இது வரையில் ரிம 1.045 திரில்லியனை எட்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டி இருந்தார்.

“ஊதிய உயர்வு வழங்கப்பட்டால் நாட்டின் கடன் மேலும் அதிகரிக்கக் கூடும்.”

ஆயுதப் படை, காவல் துறை, ஆசிரியர்கள் ஆகியோர் உடப்ட நாட்டில் 1.2 மில்லியன் பொதுச் சேவை ஊழியர்கள் இருக்கிறார்கள்.

1எம்டிபி விவகாரம் உலகின் மிகப் பெரிய ஊழலாகக் கருதப்படுகிறது. இதனால். புத்ராஜெயாவுக்கு மேலும் ரிம 32.08 மில்லியன் கடனை அதிகரிக்கச் செய்துள்ளது என நஸாரி மேலும் சொன்னார்.

நாட்டில் தேவையில்லாதச் செலவைக் குறைத்து சிக்கனத்தைக் கடைபிடித்தால், அரசாங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வைச் சாத்தியப்படுத்த வாய்ப்பு இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே இதே விவகாரம் குறித்து கருத்துரைத்த அரசாங்கத்தின் முன்னாள் முத்த உயர் அதிகாரியான ரேமன் நவரத்தினம் குறிப்பிடுகயில், ஹேவையில்லாத சில செலவுகளால் அரசாங்கப் பணியாளர்களின் ஊதிய உயர்வைச் சாத்தியப்படுத்த முடியும் என அவர் சொன்னார்.

புத்ராஜெயாவும் கியூப்பெக்ஸ் எனப்படும் பொதுச் சேவைத் துறை ஊழியர்களீன் அமைப்புகளின் சம்மேளனம் ஆகியன இணைந்து இவ்விவகாரம் குறித்து கலந்தாலோசனை நடத்தி பரிவுமிக்க எண்ணத்துடன் அரசாங்கப் பணியாளர்களின் ஊதிய உயர்வுக்கு வழி காண வேண்டும் என ரேனம் குறிப்பிட்டார்.

ஊதிய விவகாரத்தில் சுமூகமான தீர்வு காணப்படவில்லை என்றால் நாட்டின் நிதி நிலைமையும் பொருளாதாரமும் மேலும் மோசமடையக் கூடும் என்றார்.

“அதே சமயம், தனியார் துறை போல் பொதுச் சேவைத் துறை ஊழியர்களும் தங்களின் ஆக்கத்திறனை மேம்படுத்திக் கொண்டு ஊதிய உயர்வுக்கு தங்களை நகர்த்த வேண்டும்.”

கியுப்பெக்சின் இந்த கோரிக்கையை புத்ராஜெயா நிராகரிக்க முடியாது காரணம் ஊதிய உயர்வு குறித்த போராட்டங்கள் எழக்கூடும் என அவர் சுட்டிக் காட்டினார்.

Leave a Reply