
அரசு ஊழியர்களுக்கு ரிம 500 நோன்புப் பெருநாள் ஊக்கத் தொகை ! (காணொளி)
713 total views, 1 views today
புத்ராஜெயா – 5 ஏப்பிரல் 2022
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அரசுத்துறை ஊழியர்களுக்கு குறிப்பாக DG 56க்கும் கீழ் இருக்கும் அரசுத்துறை ஊழியர்களுக்கு 500 வெள்ளி ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார்.
நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த முறையிலான Contract Of Service, Contract For Service, தர்காலிக ஊழியர்களான Pegawai Sambilan Harian, MySTEP திட்டத்தின் கீழ் அரசுத்துறையில் பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த ஊக்கத் தொகை வழங்கப்படும்.
மேலும், அரசுத் துறையில் இருந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 250 வெள்ளி ஊக்கத் தொகையும் வழங்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மாதம் 25 தேதி முதல் ஏப்ரல் மாதச் சம்பளத்தோடு இந்த ஊக்கத் தொகை செலுத்தப்பட உள்ளதென டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி சொன்னார்.