‘அறிவு ஆசான்’ தலைவர் தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா !

India, Malaysia, News, World

 101 total views,  2 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 17 செப் 2022

மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 25.9.2022 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணிக்கு தொடங்கி மாலை 6.00 வரையில், கோலாலும்பூர் தான்சிறீ, டத்தோ, கே.ஆர். சோமா அரங்கில், சுயமரியாதை இயக்கத்தின் தலைவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 144ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, கழகத்தின் தலைவர், நாக.பஞ்சு அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவை, பகாங், சாபாய் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு, தமிழச்சி காமாட்சி துரைராசு அவர்கள் தொடக்கிவைத்து உரையாற்றுவார்.

தமிழ்நாடு சமூகநீதி கண்காணிப்புக்குழுத் தலைவரும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளருமான பேராசிரியர், சுப. வீரபாண்டியன் அவர்கள் காலை – மாலையென இரு நேரமும் எழுச்சியுரையாற்றவுள்ளார். தொடர்ந்து, விழா மலர் வெளியிடலையும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே நடத்துவார்கள்.

விழாவில் சொற்போர்; கடந்த 17.9.2022இல், இயங்கலை வழியாக நடைபெற்ற சொற்போரில் வெற்றிபெற்ற இரண்டு அணிகளின்  இறுதிச் சுற்று 25.9.2022 ஆம் நாள் விழாவன்று, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் ‘பெரியார் பெருந்தொண்டர்’ சிற்பி அர. செல்வராசு அவர்களின் தலைமையில் நடைபெறும்.

பெரியார் பிறந்தநாள் விழாவில் மூவருக்கு விருது வழங்குதல்
கழகத்தின் மதியுரைஞர் ‘கொள்கைச்சுடர்’ இரெ.சு.முத்தையா அவர்களின் தலைமையில், விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும்.

கவிதைப் படைப்பு
‘புலவர்’ கு.க. இராமன் அவர்களின் தலைமையில்; மூன்று இளம் கவிஞர்கள் கவிதைப் படைப்பார்கள்.

ஆகவே, இலவசமாக நடைபெறும் தந்தை பெரியாரின் 144ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவிற்கு, பெரியார் சிந்தனையாளர்களும் கழகத் தோழர்களும் தந்தை பெரியார் மீது பற்றுகொண்ட பொதுமக்கள் அனைவரும் திராளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென பணிவன்போடு கழகப் பொதுச்செயலாளர், அன்பரசன் சண்முகம் அனைவரையும் அழைக்கின்றார்.

தொடர்புக்கு: 0122679180 / 0129424301 / 0123965793

Leave a Reply