அல்மா தோட்ட ஶ்ரீ ஜடா முனி ஆலய நிலப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்படும்- பேராசிரியர் இராமசாமி

Uncategorized

 259 total views,  3 views today

டி.ஆர்.ராஜா

பட்டர்வொர்த்-

செபராங் பிறை மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ள அல்மா ரப்பர் தோட்டத்தில் ஶ்ரீ ஜடா முனி ஆலய நிலப்பரச்சனை சுமூகமான முறையில் தீர்வு காண படவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் .இவ்வலயத்தின் பிரச்சனைக்கு தீர்வு காணபதிலிருந்து பின் வாங்கபோவதில்லை என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார்.


புக்கிட் மெர்தாஜம்,மத்திய மாவட்டம் அல்மா தோட்டப் பகுதியில் அமைந்துள்ள கடந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஜடா முனி ஆலயத்தை உடைக்க நினைக்கும் அல்மா ரப்பர் நில உரிமையாளருக்கு செபராங் பிறை மாநகர் மன்றம் வழங்கிய அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகச் அவர் கூறினார். தற்போது நீதிமன்ற ஆணையுடன் ஆலயத்தை உடைக்க நில உரிமையாளர் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை கண்டிக்கத்தக்கது என்றார்.


ஆலயமோ அல்லது பிற இனங்களின் வழிபாட்டுத் தலங்கள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அந்நிலம் எடுத்துக் கொள்ளப்படுமானால் பேச்சு வார்த்தையின் அடிப்படையில் மாற்று நிலம் அல்லது மானியத்தைக் கொடுத்து அதற்குரிய தீர்வை கான வேண்டும். மாறாக வழிபாட்டுத் தலங்களை உடைக்க முனைப்பு காட்டுவது மிகவும் வேதனைகுரியது அதற்கு ஒருபோதும் பினாங்கு மாநில அரசாங்கம் அனுமதி வழங்காது.
இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வரையில் யாரும் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படக்கூடாது எனக் கூறிய பேராசியர் இராமசாமி, அல்மா ஸ்ரீ ஜடா முனி ஆலயத்தில் அப்பகுதியில் உள்ள தோட்டத்து பொது மக்கள் தரிசனம் செய்யாமல் தடுக்கும் நில உரிமையாளரின் நடவடிக்கை இறையாண்மை கொள்கைக்கு எதிரானது என பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவரான பேராசிரியர் பி.இராமசாமி கண்டனம் தெரிவித்தார்.
ஶ்ரீ ஜடா முனி ஆலயத்திற்குப் பாதுகாப்பு வழங்க பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்பதுடன், பினாங்கு மாநில அரசாங்கத்தின் சார்பில் செபராங் பிறை மத்திய மாவட்டம் நில அலுவலகம் மற்றும் நில உரிமையாளரின் வழக்கறிஞர் நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டு பேச்சு வார்த்தையின் அடிப்படையில் தீர்வுகாணப்படும் என இராமசாமி மேலும் கூறினார் .

Leave a Reply