அளவுக்கு மீறிய நம்பிக்கையை கைவிட வேண்டும்- ரபிஸி

Malaysia, News, Politics

 101 total views,  1 views today

கோலாலம்பூர்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற அளவுக்கு மீறிய நம்பிக்கை கொண்டிருப்பதை பிகேஆரும் பக்காத்தான் ஹராப்பானும் கைவிட வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.

கெளரமான எதிர்க்கட்சியாக வலுவாக நிலைத்திருப்பதில் பிகேஆரும் பக்காத்தான் ஹராப்பானும் தீவிரம் காட்டிக்  கொள்ள வேண்டும்.

அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்த யதார்த்த நிலையை ஏற்றுக் கொள்வது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply