அவசர அமைச்சரவை கூட்டம்- பிரதமர் பதவி விலகுகிறாரா?

Malaysia, News, Politics, Uncategorized

 471 total views,  2 views today

கோலாலம்பூர்-

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை இழந்து விட்ட பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின், இன்று பிரதமர் பதவியிலிருந்து விலகக்கூடும் என்ற தகவல் சமூக ஊடகங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கான ஆதரவை அம்னோவைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதை அடுத்து அக்கூட்டணி ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழால் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி இன்று அவசர அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவிருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் என அனைவரும் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் பதவி விலகுவதற்கான முடிவை எடுக்கலாம் என்று நம்பப்படுகிறது.
செப்டம்பரில் நடைபெறும் மக்களவைக் கூட்டத்தில் தனக்கான பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று கூறிவந்த பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின், நேற்று மக்களுக்கு ஆற்றிய சிறப்பு நேரலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினராவது நிரூபித்தால் மட்டுமே பிரதமர் பதவியிலிருந்து விலகுவேன் என அறிவித்தார்.
இதனிடையே, அடுத்த 48 மணி நேரத்திற்கு இந்த அரசியல் இழுபறி நெருக்கடியாக அமையும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply