அவுலொங் சட்டமன்றம் ம இ காவின் நம்பிக்கையான தொகுதியாக உருமாறுகிறது – ம இ கா

Malaysia, News, Politics, Polls

 68 total views,  1 views today

வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு!!

அவுலொங் – 13/11/2022 :

நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் பேரா மாநிலத்தில் ம இ கா
போட்டியிடும் அவுலொங் சட்டமன்றம் அக்கட்சியின் நம்பிக்கையான தொகுதியாக உருமாறி வருகிறது.அக்கட்சி வேட்பாளருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைப்பதோடு அவருக்க அத்தொகுதியில் ஆதரவும் பெருகி வருகிறது.

இடைநிலைப்பள்ளி தமிழாசிரியரான சண்முகவேல் இம்முறை தேசிய முன்னணியின் வேட்பாளராக அத்தொகுதியில் களம் காண்பது தொடக்கத்தில் எதிர்மறையான கருத்துகள் நிலவி வந்த போதிலும் அவரது தேர்தல் பிரச்சார பாணியும் மக்களை அணுகும் முறையும் மக்களிடையே நல்ல மதிப்பினை பெற்றுள்ளது.

இவ்வட்டாரத்தில் நன்கு அறிமுகமான ஆசிரியரும் மக்கள் சேவையாளருமான சண்முகவேல் இத்தொகுதியில் நம்பிக்கை வேட்பாளராகவும் வலம் வருகிறார்.ஒவ்வொரு நாளும் அவர் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களின் ஆதரவு அமோகமாக இருப்பதை காண முடிகிறது.

பேரா மாநிலத்தில் கடந்த 2008ஆம் நடைபெற்ற நாட்டின் 12வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற எந்தவொரு பொதுத் தேர்தலிலும் ம இ கா வேட்பாளர் ஒருவர் கூட வெற்றி பெறாத நிலையில் அந்த ஏமாற்றத்தை இம்முறை சண்முகம் சரி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெறவிருக்கும் 15வது பொதுத் தேர்தலில் ம இ கா பிரதிநிதியாக தேசிய முன்னணி சார்பில் களமிறங்கும் சண்முகவேல் மக்களின் ஆதரவோடு கூட்டணி கட்சிகளின் ஆதரவோடும் வெற்றிகரமான இலக்கை நோக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்பதை கண்கூடா பார்க்கவே முடிகிறது.

அவுலொங் தொகுதியில் ஐந்து முனை போட்டியை எதிர்க்கொள்ளும் சண்முகவேல் ஜசெகவிடமிருந்து அத்தொகுதியை இம்முறை மீட்டெடுப்பார் என்னும் நம்பிக்கை தேசிய முன்னணியினர் மத்தியிலும் ம இ கா வினரிடமும் பெரும் நம்பிக்கையாக எழுந்துள்ளது.

இதற்கிடையில்,வாக்களிக்கும் நாளுக்கு இன்னும் 7 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் வெற்றி வாய்ப்பு குறித்து சண்முகவேலுவிடம் கேட்டறிந்த போது தேர்தல் காலம் மட்டுமின்றி எல்லாக்காலங்களிலும் தாம் மக்களுக்கான சேவையை நிறைவாக செய்திருப்பதாக கூறியதோடு தேர்தல் களத்தில் மக்களை சந்திக்கும் போது இதுநாள் வரை செய்த சேவைக்கு அங்கிகாரம் இருப்பதாகவே உணர்கிறேன்.

மக்களின் ஆதரவும் அவர்கள் கொடுக்கும் உற்சாகவும் நிறைவாக இருப்பதோடு நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக கூறும் சண்முகவேல் இங்குள்ள இளம் வாக்களர்களும் தன்னை நன்கு அறிந்து வைத்திருப்பதால் அவர்களின் ஆதரவு நன்நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

தொகுதி உடன்படிக்கை அடிப்படையில் முதல்முறையாக இத்தொகுதியில் ம இ கா போட்டியிடுகிறது.இருபினும்,இங்குள்ள மக்களின் ஆதரவு கட்சிக்கும் தேசிய முன்னணிக்கும் வலுவாகவே இருப்பதை உணரமுடிவதோடு இந்த பொதுத் தேர்தலில் ம இ கா அவுலொங் தொகுதியில் வெற்றி பெறுவதற்கான சாத்தியத்தையும் கொண்டிருப்பதாக சண்முகவேல் தனது நம்பிக்கையினை வெளிப்படுத்தினார்.

Leave a Reply