அவுலோங்கில் இந்தியர்களின் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் !

Malaysia, News, Politics, Polls

 69 total views,  1 views today

இரா. தங்கமணி

தைப்பிங் – 8/11/2022

அதிகமான இந்தியர்கள் வசிக்கும் அவுலோங் தொகுதியில் புதிய தமிழ்ப்பள்ளியை கட்டுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அவுலோங் தேசிய முன்னணி வேட்பாளர் சண்முகவேலு தெரிவித்தார்.

இங்கு அதிகமான இந்தியர்கள் வசித்தாலும் தமிழ்ப்பள்ளி இல்லாதது ஒரு குறையாகவே இருக்கிறது.

இதனால் இங்குள்ள பெரும்பாலான இந்திய மாணவர்கள் அருகிலுள்ள தேசியப்பள்ளிக்கு செல்கின்றனர்.
இந்நிலையை மாற்றியமைக்க புதிய தமிழ்ப்பள்ளி அல்லது குறைந்த மாணவர்களால் இடமாற்றம் காணக்கூடிய பள்ளியை இங்கு நிர்மாணிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

முதல் முறையாக இங்கு இந்திய வேட்பாளராக தாம் களமிறங்கும் நிலையில் இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

Leave a Reply