அஸாம் பாக்கிக்கு எதிரான பேரணி- தேசிய கீதத்துடன் முடிந்தது

Malaysia, News

 122 total views,  2 views today

கோலாலம்பூர்-

எம்ஏசிசி ஆணையர் அஸாம் பாக்கியை கைது செய்ய வலியுறுத்தி கோலாலம்பூரில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணி தேசிய கீதத்துடன் நிறைவுக்கு வந்தது.


இன்று காலை 11.00 மணியளவில் பங்சார் எல்ஆர்டி நிலையத்தின் முன்பு திரண்ட பேரணி குழு எம்ஏசிசி ஆணையர் அஸாம் பாக்கியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு குரல் எழுப்பினர்.


எதிர்ப்புப் பேரணி கலைந்து போக வேண்டும் என போலீஸ் பலமுறை வலியுறுத்தியதன் விளைவாக கலைந்து செல்வதற்கு அக்குழு இணக்கம் கண்டது.


பங்கு பரிவர்த்தனையில் பங்குகள் வாங்கியது தொடர்பில் அஸாம் பாக்கி மீது குற்றச்சாட்டு எழுந்ததன் தொடர்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை எதிர்க்கட்சியினர் உட்பர பல்வேறு தரப்பினர் நெருக்குதல் கொடுத்து வருகின்றனர்.

Leave a Reply