ஆகஸ்டு வரை வெப்பமான வானிலை ! – இயற்கை வளம், சுற்றுச் சூழல், வானிலை மாற்றம் அமைச்சு தகவல்

Malaysia, News, Weather

 41 total views,  1 views today

கிள்ளான் | 9-5-2023

எதிர்வரும் ஆகஸ்டு மாதம் வரையில் நாட்டில் வெப்பமான வானிலை தொடரும் என இயற்கை வளம், சுற்றுச் சூழல், வானிலை மாற்றம் அமைச்சர் நிக் அஸ்மி நிக் அகமாட் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் திறந்த வெளியில் எரிக்கும் நடவடிக்கைகளை பொது மக்கள் மேற்கொள்ள வேண்டாம் எனவும், அவ்வாறு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நிலத்தடி நீரை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த கவனத்துடன் அதனைப் பயன்படுத்த வேண்டும். வெப்ப காலத்தில் அவ்வாறான நீரில் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடிய உலோகங்கள் இருக்கும் வாய்ப்பு இருப்பதாக அறிவுறுத்தினார்.

Leave a Reply