ஆகஸ்டு 13 : அனைத்துலக இடது கை பழக்கமுடையவர்கள் நாள்

News, World

 87 total views,  2 views today

கோலாலம்பூர் = 13 ஆகஸ்டு 2022

உலகில் உள்ள மொத்த ஜனத்தொகையில், 10 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உள்ளவர்களாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு வலதுபுற உடல் பாகங்களை விட, இடதுபுற உடல் பாகங்கள் அதிகம் செயல்படுவதாக விஞ்ஞானபூர்வமாக கண்டறிந்துள்ளனர்.

மூளை, ஒரு குறிப்பிட்ட வழியில் இயங்குகிற காரணத்தால், வலது கை பழக்கம் ஏற்பட்டது. பெரும்பாலான மக்களின் மூளையின் இடது பகுதி மேலோங்கி இருப்பதால், அவர்களின் வலது பகுதி சிறந்த முறையில் இயங்குகிறது.

அதேபோல், வலது மூளைப் பகுதி மேலோங்கி இருப்பவர்களுக்கு, வலது கையை விட இடது கை, நன்கு இயங்குகிறது. இதனால், இடது கை பழக்கம் ஏற்படுகிறது.
இந்த, 10 சதவீத மக்களில், பல புகழ்பெற்ற மனிதர்களும் இடது கை பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர்.

இடது கை பழக்கம் உள்ளவர்கள், பல விசேஷ குணம் பெற்றவர்களாக விளங்குகின்றனர் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு அதிகளவில் படைப்பாற்றல், திறமை உள்ளதை கண்டறிந்துள்ளனர். உலகின் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு இடது கை பழக்கம் உள்ளவர்கள், காரணமாகி உள்ளனர்.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், இடது கை பழக்கமுள்ளவர்கள் தான். குறிப்பாக, டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், கூடைப் பந்து போன்ற, வேகமாக விளையாடக் கூடிய விளையாட்டுகளில், இடது கை பழக்கம் உள்ளவர்கள் சிறப்பாக செயலாற்றுவதாக கண்டறிந்துள்ளனர்.

வலது கை பழக்கம் உள்ளவர்களை விட, இடது கை பழக்கம் உடையோர், சவால்களை எளிதாக சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அதே நேரத்தில் இடது கை பழக்கமுடையோர், வித்தியாசமாக சிந்திக்கும் ஆற்றல் உடையவர்கள். இதனால், சிக்கலான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வுகளை சொல்லும் ஆற்றல் இயல்பாக உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு, முடக்கு வாதம், அல்சர் நோயும் வருவது குறைவாக இருப்பது, ௩௦ லட்சம் நபர்களை ஆய்வு செய்ததில் தெரிந்தது.
இடது கை பழக்கம் உள்ளவர்கள், வலது கை பழக்கமுள்ளவர்களை விட, வாய்மொழி பணிகளில் சிறந்து விளங்குகின்றனர் என்பதை, ஆக்ஸ்போர்டு பல்கலை கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இடது கை பழக்கமுள்ளவர்கள், ஒரே நேரத்தில், பல வேலைகள் செய்யும், ‘மல்டி டாஸ்க்’கில் வல்லவர்கள். கணக்கில் கெட்டிக்காரராக இருப்பவர்கள் அனைவரும் இடது கையால் எழுதுபவர்கள் என்று கண்டுபிடித்தார், அமெரிக்க மனோதத்துவ அறிஞர், கமிலா பெண்போ.

இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு, கோபம், பயம், சங்கடம் போன்றவைகள் அதிகம் இருக்குமாம். அவர்களுக்கு நல்ல பார்வை திறன் உண்டு.

இடது கை பழக்கம் கொண்டவர்களின் மூளையில், ‘கார்பஸ் கொலாசம்’ என்ற பகுதி, வலது கை பழக்கம் கொண்டவர்களை விட, 11 சதவீதம் அதிகம். உலகில், பெண்களை விட ஆண்களில் தான் இடது கை பழக்கம் அதிகம்.

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் கர்ப்பம் தரித்த காலத்தில், அதிக எண்ணிக்கையில், ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ எடுக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், இடது கை பழக்கம் உள்ளவர்களாக பிறக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர், லண்டன் ஆராய்ச்சியாளர்கள்.

இடது கை பழக்கம் கொண்டவர்களில் சிலர்

 • Bill Gates
 • Oprah Winfrey
 • Steve Jobs
 • Mark Zuckerberg
 • Henry Ford
 • Nikola Tesla
 • Marie Curie
 • Leonardo Da Vinci
 • Michelangelo Buonaroti
 • Neil Armstrong
 • Napoleon Bonaparte
 • Julius Caesar
 • Aristotle
 • Helen Keller
 • Brad Pitt
 • Julia Roberts
 • Tom Cruise
 • Angelina Jolie
 • Jim Carrey
 • Charlie Chaplin

– கோவீ. ராஜேந்திரன்

Leave a Reply