ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டி : மலேசியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் !

1 Minute News, Malaysia, News, Sports, World

 146 total views,  2 views today

சோலோ – 1 ஆகஸ்டு 2022

இன்று நடக்கின்ற அசியான் பாரா விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார் முகம்மட் ஸியாட் ஸோல்கிஃப்லி.

F20 குண்டு வீசும் போட்டியில் தமது திறனை வெளிப்படுத்திய 32 வயதான அவர் 16.80 மீட்டர், 16.88 மீட்டர் , 16.63 மீட்டர், 16.78 மீட்டர் dan 16.74 மீட்டர் எனத் தொடர்ந்து சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்தார்.

2013 (மியான்மார்), 2017 (கோலாலம்பூர்) ஆகிய ஆண்டுகளில் இருந்தே ஈடுபட்டு வரும் ஸீயாட்டுக்கு இம்முறை கிடைத்தது 4 வது தங்கப்பதக்கமாகும்.

அதே விளையாட்டில் மலேசியாவைச் சேர்ந்த மற்றோரு விளையாட்டாளரான முகம்மட் அலிஃப் முகம்மட் அவி 13.46 மீட்டர் தூரம் வீசி 2 வது இடத்தைப் பிடித்ததோடு இல்லாமல் அவருக்கு இது மூன்றாவது வெள்ளிப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply