ஆட்சி அமைக்கிறதா தேசியக் கூட்டணி ?

Malaysia, News, Politics, Polls, Uncategorized

 24 total views,  1 views today

இரா. தங்கமணி | 20-11-2022

பக்காத்தான் ஹராப்பானுடன் கைகோர்க்க அம்னோவின் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 29 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிக்காத்தான் நேஷனலுடன் கைகோர்க்க முடிவெடுத்திருக்கின்றனர்.

டான்ஶ்ரீ முஹிடின் யாசின் பிரதமராக பதவியேற்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் தலைமையில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறி நிலையில் இறுதியாக பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமையலாம் என கணிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி பெரிக்காத்தான் நேஷனல், தேசிய முன்னணி, ஜிஆர்எஸ், ஜிபிஎஸ் ஆகியவை இணைந்து மத்திய அரசாங்கத்தை அமைக்கவுள்ளன.

Leave a Reply