ஆட்சி, பிரதமர் மாற்றம் நாட்டுக்கு நல்லதல்ல- பிரதமர்

Uncategorized

 146 total views,  3 views today

கோலாலம்பூர்-

நாட்டில் அரசாங்க மாற்றமும் பிரதமர்கள் மாற்றமும் நிகழ்த்தப்படுவது மக்களுக்கும் நாட்டுக்கும் பேரிழப்பு என்று பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வலியுறுத்தினார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னமும் 21 மாதங்களே எஞ்சியுள்ளன. ஆனால் 14ஆவது பொதுத் தேர்தல் முடிந்து மூன்றாண்டுகளுக்குள்ளாகவே இரு ஆட்சி மாற்றமும் இரு பிரதமர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஒரு தவணை முடிவதற்கு முன்பாகவே இதுபோன்ற அரசியல் மாற்றங்கள் நிகழ்த்தப்படுவது நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படுகின்ற பேரிழப்பு என்று குறிப்பிட்ட டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், நாடு எதிர்கொண்டுள்ள கோவிட்-19 வைரஸ் தொற்று, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிலிருந்து மீட்சிபெற எதிர்க்கட்சி உட்பட அனைத்துத் தரப்பினரும் ஒரு குடும்பமாய் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று இன்று மக்களுக்கு ஆற்றிய சிறப்புரையில் குறிப்பிட்டார்.
பிரதமராக பதவியேற்ற பின்னர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் சிறப்புரை இதுவாகும்.

Leave a Reply