ஆண்டிறுதியில் மலேசியர்கள் சந்திக்கப்போவது 2023 வரவு செலவுக் கணக்கையா ? தேர்தலையா ? வெள்ளத்தையா ?

Malaysia, News, Politics, Special News

 24 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 18 செப் 2022

ஆண்டு இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கும்போது மக்களால் வழக்கமாக அதிகம் எதிர்ப்பார்க்கப்படுவது. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுக் கணக்கறிக்கை. அதே சமயம், கடந்த சில ஆண்டுகளாக ஆண்டிறுதி என்றாலே தற்போது வெள்ளப் பிரச்சனையையும் மக்கல் சந்தித்து வருகிறது.

ஆனால், 2022 ஆம் ஆண்டிறுதியில் அந்த இரண்டோடு 15வது பொதுத் தேர்தல் அனலும் சேர்ந்து கொள்ளும் நிலையில் இப்போது மலேசியா இருக்கின்றது எனலாம்.

அக்தோபர் – நவம்பர் காலக் கட்டத்தில் பருவக் காற்று மாற்றம் ஏற்பட இருப்பதை மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் அக்காலக்கட்டத்தில் மாலை வேளையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என அது கூறியது.

இத்தாக்கத்தால் வெள்ளப் பிரச்சனை ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் குறிப்பாக தாழ்வான நிலப் பரப்பைக் கொண்டுள்ள மேற்குத் தீபகற்பப் பகுதி மோசமாகப் பாதிக்கப்படும் என்பதையும் அம்மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் – திசம்பர் காலக்கட்டத்தில் கிழக்குத் தீபகற்பகுதியிலும் மேற்கு சரவாக், கிழக்கு சபா ஆகிய மகுதிகளிலும் தொடர் மழை பெய்யக்கூடும். இதனால் திடீர் வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

வானிலை நிலவரம் இவ்வாறூ இருக்க, நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்காக 2023 க்கான வரவு செலவுக் கணக்கறிக்கை அக்தோபர் 7 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இவ்வாண்டே தேர்தல் நடத்தப்படும் என தமக்கு உறுதி அளித்திருப்பதாக தேசிய முன்னணியின் நிகழ்ச்சியில் பேசிய அம்னோவின் உதவித் தலைவர் முகம்மது ஹசான் குறிப்பிட்டார்.

2023 வரவு செலவு அறிக்கையில் தேர்தலை அடிப்ப்டஒயாகக் கொண்ட வாக்குறுதிகள் அதிகமாகக் கணப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வாக்காளர்களைக் கவரும் வகையில் பல “பரிசுகள்” இருக்கக் கூடும்.

கடந்த 2018 ஆம் ஆண்டு 14ஆம் பொதுத் தேர்தலுக்குப் பின் ஜூலை 2023 தவணை நிறைவு பெறுகிறது.

திசம்பரைக் காட்டிலும் தேர்தலை நடத்தப்பட சிறந்த காலம் எனக் குறிப்பிடும் முகம்மது ஹசான், மிக மோசமான வானிலை ஆண்டின் இறுதி மாதத்திலேயே ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

கடந்த சில மாதங்களாக, 15வது பொதுத் தேர்தல் தேதி குறித்து பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கும் அம்னோ தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடிக்கும் இடையே ஒரு “நீயா நானா” நடந்து கொண்டு இருக்கிறது.

நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்திருக்கும் ஸாஹிட், இவ்வாண்டே தேர்தலை நடத்தி விட வேண்டும் எனும் நெருக்கடியில் இருக்கிறார்.

அம்னோவின் பொதுக் கூட்டத்திலிருந்தே ஸாஹிட்டும் இன்னும் சில அம்னோவின் உயர் நிலைத் தலைவர்களும் அவ்விவகாரத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்காக இவ்வாண்டு நடத்தப்பட வேண்டிய அம்னோவின் கட்சித் தேர்தலை ஒத்தி வைக்க வழி வகை செய்யும் கட்சியின் சட்டமாற்றத்தைக் கொண்டு வந்தும் இருக்கிறார்கள்.

முன்னாள் பிரதமர் நஜிப் இரஸாக் வழக்கில் தோல்வி அடைந்து சிறை சென்ற பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்பட அம்னோவின் சில முக்கிய ஆணி வேர்கள் வலியுறுத்தி வருவதையும் காண முடிகிறது. மிக அண்மையில், பிரதமர் கலந்து கொண்ட தேசிய முன்னணீ நிகழ்ச்சியில் கூட, “Bubar!!!” பூபார் முழக்கம் ஓங்கியது.

தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் தேசிய முன்னணியின் மகளிர் பிரிவினரின் கருத்தையும் தாம் கவனிக்க இருப்பதாக பிரதமர் முன்னதாகக் கூறினார்.

கடந்த ஆண்டு ஷா ஆலாம், கிள்ளான், உலு லங்காட் ஆகியப் பகுதிகளீல் ஏற்பட்ட மோசமான வெள்ளம்போல் இவ்வாண்டும் நடக்கலாம் என்பதையும் மலேசிய வானில ஆய்வு மையம் மறுக்கவில்லை.

ஆகக் கடைசியான கணிப்பின்படி, அக்தோபர் மாத வானிலை அம்மாதத்திலேயே நடத்தப்படும் தேர்தலுக்குப் பெரிய சவாலாக அமையாது. பெரிய வெள்ளமோ புயல் காற்றோ பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தாது என அம்மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நவம்பர் தொடக்கத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டால், பெரும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

ஆனால், நவம்பர் மத்தியில் இருந்து மோசமான வெள்ளம் பெருக்கை மக்கள் சந்திக்கக் கூடும்.

நவம்பர் முதல் அடுத்த ஆண்டு சனவரி மாதம் வரையில் பெய்ய இருக்கும் மழை நீர் அளவு மிக அதிகமாக இருக்கக் கூடும் என மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் வானிலை  மாற்ற ஆய்வு மையத்தி தலைவர் மர்லியா முகம்மது ஹனாஃபியா தெரிவித்துள்ளார்.

இப்போது பெர்ய்து வரும் மழையால் அவ்வளவு பெரிய தாக்கம் ஏற்படாதுதான். இருந்தாலும், இந்நிலை தொடர்ந்து நீடித்தால் சில தாழ்வான நிலப்பகுதிகளில் பெரும் வெள்ளத்திற்கான அபாயம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், பொதுத் தேர்தல் திசம்பர் மாதத்தில் நடத்தப்பட்டால், பெரிய வெள்ளமும் மோசமான பாதிப்புகளும் இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தலைவர் ஹெல்மி தெரிவித்தார்.

அப்போதையப் பருவக் காற்று மாற்றம் மிகவும் பலமாக இருக்கக் கூடும் என்பதால் பொது மக்கள் என்றும் கவனத்தோடு இருக்க வேண்டும். தங்களின் பயணங்களையும் வெளிப்புற நடவடிக்கைகளையும் முறாஇயாகத் திட்டமிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply