ஆரவாரத்துடன் தாயகம் திரும்பிய மலேசியர்கள்

Uncategorized

 112 total views,  3 views today

ஜோகூர்பாரு-

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மலேசியாவின் அனைத்துலக எல்லைகள் திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்ட நிலையில் சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் பெரும் ஆரவாரத்துடன் தாயகம் திரும்பினர்.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக மலேசியா தனது அனைத்துலக எல்லைகளை மூடியது. இதனால் சிங்கப்பூரில் வேலை செய்து வரும் மலேசியர்கள் தாயகத்திற்கு திரும்ப முடியாமல் அங்கேயே இருந்து வந்தனர்.

கோவிட்-19ஐ குறுந்தொற்றாக மலேசியா அறிவித்துள்ள சூழலில் அனைத்துலக எல்லைகள் ஏப்ரல் 1 முதல் திறக்கப்படும் என அறிவித்தது.

இதனிடையே நேற்று நள்ளிரவு உட்லண்டஸ் டோல் சாவடி அருகே திரண்ட மலேசியர்கள் 12.00 மணிக்கு பின்னர் பெரும் ஆரவாரத்துடன் சொந்த தாயகம் திரும்பினர்.

ஈராண்டுகளாக குடும்ப உறுப்பினர்களை காணாமல் தவித்த இவர்கள், வெகு நாட்களுக்குப் பின்னர் குடும்ப உறுப்பினர்களுடன் இணைய காத்திருக்கும் அந்த தருணத்தை வரவேற்க மகிழ்ச்சி பொங்க நடந்தே டோல் சாவடிகளை கடந்து வந்தனர்.

Leave a Reply