ஆரோக்கியம் இல்லாத நாடாக மலேசியா

Uncategorized

 138 total views,  2 views today

கோலாலம்பூர், நவ.12-

இருதய பாதிப்பு, உடல் பருமன்  போன்ற உடல் நலப் பிரச்சனைகளை மலேசியர்கள் அதிகம்  எதிர்கொண்டுள்ளதால் மக்கள் ஆரோக்கியம் இல்லாத நாடாக மலேசியா கருதப்படுவதாக, சுகாதார அமைச்சர்  கைரி ஜமாலுடின் தெரிவித்தார். 

மக்களுக்கு உடல் பருமன், இருதய பாதிப்பு பிரச்சினை  அதிகமுள்ளதால், கோவிட் தொற்றால் அதிகமான உயிரிழப்புகளையும் மலேசியா  பதிவு செய்திருக்கிறது.

மலேசியர்களிடையே உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும்  குறைவாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் இருவரில் ஒருவர் உடல் பருமனாக இருக்கின்றார்.   நால்வரில் ஒருவர்  உடற்பயிற்சி செய்வதில்லை. 20-இல் ஒருவர்  முறையான ஊட்டச்சத்துள்ள  உணவு முறையைக் கடைப்பிடிப்பதில்லை. அத்துடன், அதிகாரப்பூர்வ புள்ளிவிபரப்படி  நாட்டில் பெரியவர்களில் 5 லட்சம் பேர்  மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர் என காட்டுகின்றது.

எனவே, ஆரோக்கியமான மலேசிய தேசிய திட்டத்தை நனவாக்க  மலேசியர்கள் தான் அவர்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதில் சிரத்தையை எடுக்க வேண்டும் .

சுய உடல் பரிசோதனை செய்யும் விழிப்புணர்வும் அவர்களுக்கு இருக்க வேண்டுமென கைரி ஜமாலுடின் வலியுறுத்தினார்.

Leave a Reply