ஆலய வழிபாட்டிற்கு தடை விதிப்பதா? கேபிஜே நிறுவனத்தை சாடினார் குணராஜ்

Malaysia, News

 183 total views,  1 views today

ரா.தங்கமணி

கிள்ளான் –

இந்துக்களின் சமயப் விழாவான நவராத்திரி விழா அனைத்து . ஆலயங்களிலும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வரும் நிலையில் ஷா ஆலம், செக்‌ஷன் 18இல் உள்ள ஶ்ரீ மஹா படபத்தர காளியம்மன் ஆலயத்தைச் சுற்றிலும் வேலி அமைத்து பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ள கேபிஜே நிர்வாகத்தின்  போக்கு கண்டிக்கத்தக்கது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் சாடினார்.

சுமார் 100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள இவ்வாலயத்தை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையை முன்னெடுத்து வரும் நில உரிமையாளரான கேபிஜே நிர்வாகம், ஆலய நிர்வாகத்தினருக்கு நெருக்குதல் கொடுக்கும்  வகையில் ஆலயத்தைச் சுற்றிலும் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளதோடு பூசைகளை செய்ய மட்டுமே ஒருவருக்கு மட்டுமே உள்ளே நுழைய அனுமதி வழங்குகிறது.

இந்துக்களின் சமய விழாவான நவராத்திரி விழா இப்போது கொண்டாடப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்படவுள்ளது. இத்தகைய சூழலில் ஆலய வர பக்தர்களுக்கு தடை போடும் வகையில் தடுப்பு வேலிகளை அமைப்பது மனிதாபிமானத்தை மீறிய செயலாகும்.

கடந்த 2019இல் இவ்வாலய நிர்வாகத்திற்கு எதிராக கேபிஜே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு கேபிஜே நிறுவனத்திற்கு சாதமாக  வந்தது. நீதிமன்றத் தீர்ப்பை ஆலயச் செயலாளர் கே.பத்மநாதனுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த  ஆலயத்தை அங்கேயே நிலைநிறுத்த சிலாங்கூர் மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் மருத்துவமனையை நிறுவுவதற்காக கேபிஜே வழங்கப்பட்ட இந்நிலத்திற்கு மாற்றாக வேறு நிலத்தை அதே இடத்தில் அடையாளம் காணும்படி மாவட்ட நில அலுவலகத்திற்கு மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி பணித்துள்ளதாக குணராஜ் தெரிவித்தார்.

இதனிடையே,  கேபிஜே நிறுவனத்திற்கு மாற்று நிலத்தை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக மாநில அரசு அளித்த வாக்குறுதியின்  பேரில் பத்மநாதனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்தது.

Leave a Reply