ஆளும்கட்சியானால் மலேசியக் குடும்பம்; எதிர்க்கட்சியானால் இனத்துவேஷமா?

Malaysia, News, Politics

 161 total views,  2 views today

கோலாலம்பூர், நவ.10-

ஆளும் கட்சியாக அரசாங்கத்தில் இருக்கும்போது மலேசியக் குடும்ப உணர்வுக்கு குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள் எதிர்கட்சியாக இருந்தால் இனத்துவேஷப் போக்கை தூண்டுவிடும் நடவடிக்கையை ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர்  காலிட் சமாட் சாடினார்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இருந்தபோது மலாய்க்காரர் அல்லாதவர்களின் நலனுக்காக மட்டுமே போராடுகிறது என்று குற்றஞ்சாட்டிய தரப்பினர், தீயணைப்பு வீரர் முகமட் அடிப் மரணம் இன விவகாரமாக்கிய தரப்பையும் குறை கூறினார்.

முகமட் அடிப் மரணத்தில் கொலை அம்சத்திற்கான வலுவான ஆதாரம் எதுவும் இல்லையென அரசாங்கத்தின் அனைத்து நிறுவனங்களும் தெரிவித்த போதிலும் பக்காத்தான் ஹராப்பான் மலாய்க்காரர் அல்லாத கொலையாளியை தற்காப்பதாக எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் மனசாட்சியே இல்லாமல் குற்றஞ்சாட்டினர்.

ஒரு துயரச் சம்பவத்தையே தங்களது சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டபோது மலேசியக்  குடும்ப உணர்வு எங்கே போனது? என்று காலிட் சமாட் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply