ஆளும் அரசை கவிழ்த்து விட்டு யாருடன் கூட்டணி? டத்தோஶ்ரீ சரவணன் கேள்வி

Uncategorized

 241 total views,  1 views today

கோலாலம்பூர்-

நடப்பு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு 41 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள தேசிய முன்னணி யாருடன் கூட்டணி வைக்கும்? என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் கேள்வி எழுப்பினார்.
பிகேஆர், ஜசெக கட்சியுடனும் கூட்டணி இல்லை. இப்போது பெர்சத்து கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றால் தேசிய முன்னணியின் நிலைப்பாடுதான் என்ன?
நாடு ஏற்கெனவே கோவிட்-19 பாதிப்பு, பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் நடப்பு அரசாங்கத்தை கவிழ்த்து புதிய அரசாங்கத்தை அமைக்க தேசிய முன்னணி யாருக்கு ஆதரவளிக்கும் என்ற கேள்விக்கு பதில் யாருக்குமே தெரியாது.
இதனால் நிலையில்லாத ஓர் அரசியல் சூழலில் நாடு சிக்குண்டு ஒரு மலேசியா குழப்பான சூழலை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும்.
அதனை கருத்தில் கொண்டே நடப்பு பெரிக்காத்தான் நேஷனலுக்கு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கு ஆதரவு வழங்கும் முடிவை மஇகா எடுத்துள்ளது என்று அக்கட்சியின் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

Leave a Reply