ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனின் உயிரற்ற உடல் மீட்பு

Uncategorized

 322 total views,  1 views today

மொராக்கோ-

மொராக்கோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ரிஃப் மலைகளையொட்டிய இக்ரே கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் ராயன் கடந்த செவ்வாய் கிழமையன்று சிக்கிக்கொண்டான். சிறுவன் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய செய்தியறிந்து மொராக்கோவின் அவசரகால மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்புப்பணியை தொடங்கினர், மொராக்கோ நாட்டையும் தாண்டி உலகம் முழுவதும் கிணற்றில் சிக்கித்தவித்த இந்த சிறுவனை மீட்க அனைவரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.


கிணற்றில் உடைந்து சரியக்கூடிய மண் மற்றும் பாறைகள் காரணமாக துளையிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அதிர்வுகளைத் தவிர்ப்பதற்காக அகழ்வு குழுக்கள் கையால் குழிகளை தோண்டியதால் மீட்புப்பணிகள் மிகவும் மெதுவாக நடந்தது. நேரம் செல்ல செல்ல, சிறுவன் ராயனின் நிலை குறித்து மேலும் மேலும் அச்சம் அதிகரித்தது.


குழந்தையின் நிலை குறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் ஒப்புக்கொண்ட போதிலும், குழந்தையை உயிருடன் மீட்கும் நம்பிக்கையை மீட்புக்குழுவினர் கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்தனர். மீட்பவர்களை ஊக்குவிக்க அப்பகுதியில் கூடியிருந்த மக்கள் சிறுவனுக்காக பிரார்த்தனை பாடல்களை பாடினார்கள்.


சிறுவன் கிணற்றில் சிக்கிய ஐந்து நாள் கடினமான மீட்பு நடவடிக்கைகளுக்கு பிறகு, நேற்று சனிக்கிழமை மாலை கிணற்றின் அடிப்பகுதியில் இருந்து சிறுவன் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply